இந்த வாரத்தோடு இந்த ஷோவுக்கு பாடை கட்டிட்டோம்.. செம கடுப்பில் ரசிகர்கள்! பிக்பாஸ்க்கு ஊ..ஊ..ஊ!!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட தகவலால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் போட்டியிலிருந்து வெளியேற்றுப்பட்டுள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என எதிர்பார்க்கப்பட்ட சேரன், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.
அப்போதே நிகழ்ச்சியின் மீதான பாதி நம்பிக்கை போயிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் மொத்த நம்பிக்கையும் போய்விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி ட்ரென்டிங்
மேலும் மக்களின் ஓட்டுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்கபோவதில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியை #RedLightChannelVijayTV என்று திட்டி நெட்டிசன்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடை கட்டிட்டோம்
இனி எத்தனை சீசன் நடத்தினாலும் பார்க்க ஆள் இல்ல
இந்த வாரத்தோடு இந்த ஷோவுக்கு பாடை கட்டிட்டோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பிரயோஜனம் இல்ல
அடுத்த வாரம் முகேனுக்கு வோட் பண்ணாலும் சல்லி பைசாக்கு பிரயோஜனம் இல்ல. அவங்க முடிவு எதுவோ அதான் மக்கள் முடிவுன்னு சொல்வானுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
என்ன உலகமடா இது!
ஒன்னுமே பண்ணாதவன் 5 லட்சத்த எடுத்துகிட்டு ஓடிட்டான்!
எல்லாம் பண்ணி உழைச்சவன் ஒன்னுமே இல்லாம போறான்!
இன்னா உலகம்டா இது! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
17 ரூபாயை சேவ் பண்ணுங்க
டிடிஹெச்ல விஜய் டிவி பாக்குற எல்லாரும் உடனே அந்த சேனலை நிறுத்துங்க. 17 ரூபாயை சேவ் பண்ணுங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
நிராசையாகும் போது
ஒரு போட்டியில் ஊக்கமளிக்கலாம் ஆனால் ஆசைகாட்ட கூடாது. அந்த ஆசை நிராசையாகும் போது மனம் உடைந்து போய்விடும். தர்ஷ் என்ற பெயரை கமல் சொல்லும் போதே கைதட்டும் கூமுட்டை ஸ்டேஜ் ஆடியன்ஸ்தான் இதற்கு முழு பொறுப்பு. என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











