குள்ளச்சியா..? நல்லா திருப்பி கொடுத்தம்மா மதுமிதா.. இப்படிதான் இருக்கனும்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Cheran Vs Kavin : சேரனுக்கு வீட்டை விட்டு வெளியேற நேரம் நெருங்கிவிட்டது- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியை பிடித்து ஏறிய மதுமிதாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மதுமிதா சாண்டியை ஏறு ஏறு என ஏறியதுதான் சமுக வலைதளங்களில் இன்று விவாத பொருளாகியுள்ளது.

அடுத்தவர் அழும்போது சிரிப்பவன் எல்லாம் ஆம்பளையா என கேட்டு காரித்துப்பினார் மதுமிதா. மதுமிதாவின் ஆக்ரோஷத்தை பார்த்த மொத்த ஹவுஸ்மேட்ஸ்ம் ஒரு நிமிடம் மிரண்டு விட்டனர்.

ஆவேசத்திற்கு காரணம்

ஆவேசத்திற்கு காரணம்

மதுமிதா நேற்று வெளிப்படுத்தியது அவரின் ஒரு நாள் கோபம் அல்ல. கடந்த ஒரு மாதமாக பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவை அந்தளவுக்கு கிண்டல் செய்து காயப்படுத்தி இருக்கிறார் சாண்டி. மதுமிதாவை குள்ளச்சி என்றும் அவரின் முக அமைப்பையும் கேலி செய்ததன் வெளிப்பாடே மதுமிதாவின் நேற்றைய ஆவேசத்திற்கு காரணம்.

மதுமிதாவுக்கு பாராட்டு

மதுமிதாவுக்கு பாராட்டு

மதுமிதாவின் கோபத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதுமிதாவை பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

கரெக்டா கேட்டிருக்கிறார்

மதுமிதா த்தூ.. பொம்பள அழும் போது சிரிக்கிறவன் ஆம்பளையான்னு கேட்டதுல என்ன தப்பு? மதுமிதா கரெக்டாதான் கேட்டிருக்கிறார் என சப்போர்ட் செய்கிறார் இந்த நெட்டிசன்.

சேரன் பாவம்

சேரன், மதுமிதா இவர்கள் இருவருக்காவும்தான் பிக்பாஸ் பார்க்கிறேன். சேரன் அவர்கள் பாவம் என்று கூறியுள்ளார் இந்த ரசிகர். இவர்கள் இருவரும் தான் இதுவரை நேர்மையாக பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

மற்றவர்களை காயப்படுத்தி

எல்லாருக்கும் ஒரு லிமிட் இருக்கு என்பதை மதுமிதா நிரூபித்துவிட்டார். அடுத்தவர்களை காயப்படுத்தி ஜோக்கடிக்காதீர்கள். இதை இனிமேல் சாண்டி புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இவர்.

இது திட்டமிடப்பட்டது அல்ல

எப்போது நமது சூழ்நிலை தவறாக செல்கிறதோ அப்போது பெண்கள் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும். என்னுடைய முழு ஆதரவும் மதுமிதாவுக்குதான். இதில் திட்டமிடப்பட்டு எதுவும் செய்யப்படவில்லை. சாண்டி தொடர்ந்து மதுமிதாவை டீஸ் செய்தார். மதுமிதாவுக்கு உடம்பு சரியில்லை, அவரது முகத்தில் போட்ட பேஸ்ட்டால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அசத்துறேன் பாருங்க

மதுமிதா போன வாரம் ரேடாரில் தேடப்பட்டார் தெரியவே இல்லை. இந்த வாரம் எல்லோரையும் என் பர்ஃபார்மன்ஸ் வச்சு எப்படி அசத்துறேன்னு மட்டும் பாருங்க என்ற மோடில் உள்ளார். கிழி, கிழி, கிழி.. சாண்டி பேச்சு கொடுத்து மாட்டிக்கிட்டாப்ல என்று கூறுகிறார் இவர்.

உரிமைக்காக துணை நிற்கிறோம்

மதுமிதா சூப்பர், எல்லை மீறியவர்களுக்கு நன்றாக திருப்பிகொடுத்தார். உங்களுக்கு முழு ஆதரவும் உண்டு உங்கள் உரிமைக்காக துணை நிற்கிறோம். மற்றவர்கள் பாடம் கற்க வேண்டும். சேரனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன், அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை அவர் சிறப்பாக செய்கிறார். மற்றவர்கள் அவரை மதிப்பதில்லை. ரொம்பவும் தவறு என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X