twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவினோட லவ் சீனுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல.. தர்ஷனை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil:Promo 2:வயதில் மூத்த ஷெரினை காதலிக்கும் தர்ஷன்

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷனை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் ஒரு இலங்கை தமிழர். பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் செல்லப்பிள்ளையாக உள்ளார்.

    நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஃபாத்திமா பாபு கூட தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வாய்ப்பு அதிகம் என்று கூறினார். தர்ஷன் யாரைப் பற்றியும் பின்னால் பேசுவது கிடையாது.

    பின்னாடி பேசுகிறார்

    பின்னாடி பேசுகிறார்

    மேலும் சண்டை போடுபவர்களையும் பிரச்சனை செய்பவர்களையும் நேருக்கு நேராக கேட்டு மூக்கை உடைத்து வருகிறார். அதுபோல் தான் மீரா மற்றவர்கள் குறித்து பின்னாடி பேசுவதாக கமல்ஹாசன் முன்பு பட்டென போட்டு உடைத்தார்.

    வாயடைத்த போன வனிதா

    வாயடைத்த போன வனிதா

    இதேபோல் வனிதா அபிராமியுடன் சண்டை பிடித்த போதும் கூட அவரையும் நறுக்கென்று கேட்டார். இதனால் வாயடைத்து போன வனிதா, இந்த விஷயத்தில் நீ தலையிடாதே என்று கூறினார்.

    மக்களுக்கு பிடித்திருக்கிறது

    மக்களுக்கு பிடித்திருக்கிறது

    தவறு செய்பவர்களை நேருக்கு நேராக கேட்பதோடு புரணி பேசாமல் நேர்மையாகவும் இருக்கிறார் தர்ஷன். அவரின் எதார்த்தம் மக்களுக்கு பிடித்திருக்கிறது.

    தர்ஷனின் லவ் டயலாக்

    தர்ஷனின் லவ் டயலாக்

    இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் ஆவி உடையில் இருக்கும் ஷெரினை பார்த்து காதல் மொழி பேசுகிறார் தர்ஷன். கவின் - சாக்ஷியின் காதல் காட்சிகளை பார்த்து வெறுத்துப்போன நெட்டிசன்கள் தர்ஷனின் காதல் மொழியை வெகுவாக ரசித்துள்ளனர்.

    நல்லவேளை

    ஷெரின லவ் புரோபஸ் பண்ற மாதிரி டாஸ்க் கொடுத்துருப்பாங்க போல தர்சன் க்கு . நல்ல வேள வனிதா கிட்ட புரோபஸ் பண்ற மாதிரி டாஸ்க் கொடுக்கல என சந்தோஷப்பட்டு கொள்கிறார் இவர்.

    ஷெரினுக்கு ஃபீலிங்

    இது டாஸ்க் என்றுதான் நினைக்கிறேன்.. ஆனால் தர்ஷன் மேல ஷெரினுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு ஃபீலிங் இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன்.

    பார்க்கிற மாதிரி இருக்கு

    அந்த கவின் காதல் காட்சிகளை பார்க்கிறதுக்கு இந்த ஷெரின் - தர்ஷன் லவ் சீன் நடிப்பு என்றாலும் பார்க்கிற மாதிரியாச்சும் இருக்கு என்று கூறுகிறார் இவர்.

    ஹேன்ட்சம் வித் கேரக்டர்

    தர்ஷனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் இது என்று நம்புகிறேன். எந்த டாஸ்க்கா இருந்தாலும் செமயா பண்றது நம்ம பையன் தர்ஷன்தான்.. ஹேன்ட்சம் வித் கேரக்டர் என்கிறார் இந்த நெட்டிசன்.

    விடக்கூடாதே

    வனிதா மைன்ட் வாய்ஸ்: தர்ஷனும் ஷெரினும் சேர்ந்து சிரிக்கிறாங்களே.. விடக்கூடாதே என்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens supports Tharshan in the biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X