மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் தாங்காதுடா.. புலம்பும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கவின் - சாக்ஷி காதலை வைத்து ஓட்டி விடுவார்களோ என இப்போது அஞ்ச தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான புரமோவில் மீண்டும் கவின் - சாக்ஷி இடையேயான காதல் ட்ராக்கை ரீபூட் செய்வது போல் உள்ளது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வேற கான்செப்ட்டே இல்லையா என்றும் கவினையும் சாக்ஷியையும் விட்டா வேற கன்டஸ்டன்ட்டே பிக்பாஸ் வீட்டில் இல்லையா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சாக்ஷியை வீரியமிக்க விஷ பாட்டில் என கூறி வரும் நெட்டிசன்கள் கவின், அவரிடம் சிக்கக்கூடாது என்றும் முழிச்சுக்கோ என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இதை வச்சு ஓட்டுவீங்க?

டேய் பிக்பாஸ் ஏதாவது ஒரு நல்ல டாஸ்க்க கொடுங்க.எவளோ நாள்தான் இதை வச்சு ஓட்டுவீங்க? பிக்பாஸ்க்குனு ஒரு ஸ்டாண்டர்டு இருக்கு, அததை ரொம்ப கேவலப்படுத்தாதீங்க.. மக்கள் நல்லா இதை என்ஜய் பண்ற மாதிரி இருக்கு. மோசமான கிரியேட்டிவ் டீம் இது என்று சாடுகிறார் இந்த நெட்டிசன்.

நம்பாதே கவின்

டேய் கவின் மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் தாங்காதுடா.. போலி சாக்ஷியை நம்பாதே கவின் என அட்வைஸ் செய்கிறார் இந்த நெட்டிசன்.

நாலு சாத்து சாத்துங்க

இவன் திருந்த மாட்டான் ஆண்டவரே... அடுத்த வாரமும் நாலு சாத்து சாத்துங்க. என்று கோரிக்கை விடுகிறார் இந்த நெட்டிசன்.

லவ் ட்ராக் போதும்

மறுபடியும் கவினா! விஜய் டிவி மற்ற கன்டெஸ்டன்ட்ஸையும் ஃபோகஸ் பண்ணுங்கடா. இந்த பையனுடன் லவ் ட்ராக் போதுமான அளவு இருந்துவிட்டது. கவினை கெட்டவனாக காட்ட விரும்பினால் அவரை எலிமினேட் செய்துவிட்டு சரவணன் மீனாட்சி சீரியலை ரீபூட் செய்யுங்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

செருப்படி வாங்கப்போறது உறுதி

இதுங்க ரெண்டும் கண்டிப்பா மக்கள்கிட்டே செருப்படி வாங்க போறது உறுதி என்கிறார் இந்த நெட்டிசன்.

கவின் முழிச்சுக்கோ

ஆப்பு ரெடியாகுது கவின் முழிச்சுக்கோ.. நாங்க சாக்ஷிய எலிமினேட் பண்ண ரெடியாயிட்டோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

லிரிக்ஸ படிச்சா பரவாயில்ல

கவின் தம்பி.. வேணாம்டா.. சொல்லிட்டேன்.. விட்டுரு.. இருக்குற லிரிக்ஸ படிச்சா பரவாயில்ல. அதோட ஸ்டாப் பண்ணிரு சொல்லிட்டேன். கடந்த வாரம் சாக்லேட் மாதிரி இந்த வாரம் அல்வா, ஜலேபி, குலாப்ஜாமுனு ஏதாச்சும் எடுத்து வந்து ஒரு வாரம் ஓட்டிறாதீங்க கடந்த காலம் நினைவில் இருக்கட்டும் இருக்கனும் என்று கவினுக்கு அவ்வளவு அறிவுரை கூறியிருக்கிறார் இவர்.

உங்க நாடகம் செல்லாது

செம பாடல் கவின், இனி வேட்டையன் ஆட்டம் ஆராம்பம், ஆன்ட்டி சாக்ஷி உங்க நாடகம் எல்லாம் செல்லாது என்று கூறுகிறார் இவர்.

அடக்க முடியாதே

பிக்பாஸ் காலையிலேயே பத்த வச்சுட்டியே பரட்ட.. கவின் இப்போதான் கொஞ்சம் தெளிஞ்சி இருக்கான். இப்போ அந்த பொய் சாக்ஷி வந்து ரொமான்ஸ் பண்ணுவாலே நம்ம ஆளுக்கு வேற அடக்க முடியாதே.. என கவலைப்படுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X