இவரு எபிசோடுலையே வரமாட்டாரு.. புரமோலல்லாம் காட்றீங்க? அப்போ இன்னைக்கு என்டர்டெய்ன்மென்ட் இருக்கு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரவணனை வைத்து முதல் முறையாக புரமோ வெளியிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களில் ஒருவர் சரவணன். யாரிடமும் தேவையில்லாமல் பேச மாட்டார். குறிப்பாக பெண்களிடம் சரவணன் பேசுவது குறைவு.

ஹவுஸ் மேட்ஸ்கள் யாராவது எதையாவது கேட்டாலும் கூட சைகையிலேயே பதில் சொல்லி விடுவார். எவிக்ஷனில் இருந்து எஸ்கேப்பான சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காக கட்டிப்பிடித்த மீராவை தள்ளி போமா என மொக்கை கொடுத்தவர்.

வெளியே அனுப்புங்கள்

வெளியே அனுப்புங்கள்

தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கும் சரவணன் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையை பார்த்து கடந்த வாரம் என்னை வெளியே அனுப்புங்கள் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது என்று கெஞ்சினார்.

வாய தொறந்தீங்களாடா?

வாய தொறந்தீங்களாடா?

இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் சரவணன் பெயர் உள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் நடிகர் சரவணன் கோபப்பட்டுள்ளார். என்ன நடந்ததோ தெரியவில்லை, அவருக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை என சாண்டி, தர்ஷன், முகென் உள்ளிட்டோரை யாராவது வாய தொறந்தீங்களாடா என ஏறியுள்ளார்.

புரமோவில் ஃபோகஸ்

புரமோவில் ஃபோகஸ்

வழக்கமாக எபிசோடில் கூட காட்டப்படமாட்டார் சரவணன். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோ அவரை ஃபோகஸ் செய்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சப்ஜெக்ட் பேசுது

என்னடா இந்த சப்ஜெக்ட் பேசுது.. என சரவணனை கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

வாய் மட்டும் நீளுது

ஒரு வேலையும் பண்ணுறது இல்ல, வாய் மட்டும் நீளுது சரோக்கு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

போட்டு தள்ளிடுவோம்

தலைவனையே டென்சன் ஆக்கிட்டானுங்க எடுடா தடியை போய் போட்டுத் தள்ளிட்டு வருவோம்.. என்று கிண்டலடிக்கிறார்.

ரகளை ஸ்டார்ட்ஸ்

சித்தப்பு ரகளை ஸ்டார்ட்ஸ் போல.. என்கிறார் இந்த நெட்டிசன்.

கோபம் வந்துடுச்சு

சித்தப்பாவுக்கு கோபம் வந்துடுச்சு... என் கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

எபிசோடுலேயே வரமாட்டாரே

டேய் என்னடா சித்தப்பு புரமோலல்லாம் வந்திருக்காரு. எபிசோடுலேயே வரமாட்டாரேடா.. இன்னைக்கு ஏதோ இருக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்.

வாயை திறந்திருக்காரு

சரவணன சேர்த்த கடமைக்கு இன்று தான் வாயை திறந்திருக்கார். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X