எந்த அப்பாவும் இந்த மாதிரி இடத்துல தான் பிள்ளை கஷ்டப்படுறது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
Recommended Video
சென்னை: சேரன், லாஸ்லியா மற்றும் தர்ஷனை நாமினேட் செய்தது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாமினேஷன் புராசஸ் தொடங்கியது. இதில் இயக்குநர் சேரன், லாஸ்லியாவையும் தர்ஷனையும் நாமினேட் செய்தார்.
அதற்கு அவர் அளித்த விளக்கம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இருந்தது. அதாவது, லாஸ்லியாவும் தர்ஷனும் அப்பழுக்கற்ற அழகான குழந்தைகளாக உள்ளனர். அவர்கள் இந்த முகங்களுக்கு இடையில் வேண்டாம் என்றார். இது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெறுக்கவில்லை
புரமோவை பார்த்து யாரையும் தீர்மானிக்கக்கூடாது. சேரன் லாஸ்லியா மற்றும் தர்ஷனை வெறுக்கவில்லை. அதுக்குள்ள காரி ஊத்திட்டாங்க... என்கிறார் இந்த நெட்டிசன்.
ஜட்ஜ் பண்ணக்கூடாது
லாஸ்லியா மற்றும் தர்ஷனை நாமினேட் செய்ததற்காக சேரனை திட்டியவர்கள் தயவு செய்து எபிசோடை பாருங்கள். சேரன் அவர்களை பற்றி தவறாக பேசவில்லை. அவர்களை குழந்தைகள் என்றுதான் கூறியுள்ளார். புரமோவை பார்த்து யாரையும் ஜட்ஜ் பண்ணக்கூடாது.
அதிக ரசிகர்கள்
சேரன் லாஸ்லியா மற்றும் தர்ஷனை நாமினேட் செய்ததற்கான காரணம் அவர்களுக்கு அதிக ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. என்கிறார் இவர்.
எந்த அப்பாவும் விரும்பமாட்டார்
சேரனும் லாஸ்லியாவும் விளையாடுவதை பார்க்கவே இனிமையாக உள்ளது. லாஸ்லியாவுக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவர் லாஸ்லியாவை நாமினேட் செய்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. எந்த அப்பாவும் இப்படி அடிக்கடி சண்டை நடக்கும் இடத்தில் தனது குழந்தைகள் இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
உண்மையான அன்பு
லாஸ்லியாவையும் தர்ஷனையும் சேரன் நாமினேட் செய்ததில் எந்த தவறும் இல்லை. இந்த வீட்டில் லாஸ்லியாவும் தர்ஷனும் மாட்டிக்கொண்டதை சேரன் நேர்மையாக சொல்லிவிட்டார். சேரனுக்கு லாஸ்லியா மீது உள்ள உண்மையான அன்பை இன்னும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











