தியாகி... ஏன் ஆக்ரோசமா விளையாடுறார்? கவினை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க்கில் தர்ஷனிடம் வெறித்தனமாக போட்டிப்போட்ட கவினை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், என் நண்பர்கள் வெற்றி பெற்றால் போதும் நான் வெற்றி பெற வேண்டாம் என்று கூறி வந்தார்- மேலும் தனது வெற்றியை தன்னுடைய நண்பர்களுக்காக விட்டுக்கொடுப்பேன் என்றும் சென்டிமென்ட்டாக பேசினார் கவின்.
இதையே காரணமாக வைத்து சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்து வந்தார் கவின். இந்நிலையில் நேற்று முதல் வேற லெவலில் விளையாடி வருகிறார் கவின்.

ஓடி ஓடி கிழித்த கவின்
நேற்றைய பிளாக் பேலன்ஸிங் டாஸ்க்கில் கவின் நீண்ட நேரம் தாக்குப்பிடித்தார். இதேபோல் இன்றைய டாஸ்க்கிலும் மற்றவர்களின தெர்மா கோல் பையை ஓடி ஓடி கிழித்தார். இதனால் தர்ஷனுக்கும் கவினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அடுத்தவர் முதுகில் சவாரி
இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்போது கவின் விட்டுத்தர வேண்டியதுதானே, இத்தனை நாள் தியாகம் செய்கிறேன் என்று கூறி நடித்து அடுத்தவர் முதுகில் சவாரி செய்தது இப்போது வெளிப்படுகிறது என சாடியுள்ளனர். மேலும் எங்கே அந்த தியாக செம்மலை காணோம் என்றும் கலாய்த்துள்ளனர்.
ஏன் ஆக்ரோசமா விளையாறார்?
தியாகி... ஏன் ஆக்ரோசமா விளையாடுறார்? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
பயந்துட்டான் கவின்
தர்ஷன் ஒரு சவுண்டு விட்டதுக்கே கக்கூஸ் கவின் பயந்துட்டான் என்கிறார் இந்த நெட்டிசன்.
ஆதரிப்பார்களா?
பெண்களை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்யும் தியாகியை வெளியேற்றவேண்டும்! இவரின் இந்த தூ தூ செயலை அவர் ரசிகர்கள் ஆதரிப்பார்களா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
இப்போ பசங்க போல
நல்லா விட்டுக்கொடுக்குறான்.. கக்கூஸ் கவின்.. பொண்ணுங்கள டார்கெட் பண்றது ஸ்டாப் பண்ணிட்டு.. இப்போ பசங்க போல.. அதுவும் டைரக்ட்டா தர்ஷன்தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
விட்டுக்கொடுக்குறாராம்
லாஸ்லியா பேக்ல கை வச்சதுக்கு கையை எட்றா தர்ஷன்னு சொல்றான் கவின்.. தர்ஷன டார்கெட் பண்றதே நீதான் இதுல விட்டு கொடுக்குறாராம். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நல்ல உள்ளத்தை பார்
தர்ஷனுக்காக விட்டுக்கொடுக்கும் நல்ல உள்ளத்தை பார் என்கிறார் இந்த நெட்டிசன்.
தியாகி ஆச்சே
கவின்தான் தியாகி ஆச்சே அவரு தர்ஷனுக்கு விட்டு கொடுக்குறன்னு சொன்னாரே இப்போ விட்டுக்கொடுக்கலாமே.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
கொஞ்சம் பார்த்த சொல்லுங்கப்பா
யாருப்பா அது தியாகச்செம்மல்ன்னு சுத்திகிட்டு இருந்தது? கொஞ்சம் பார்த்த சொல்லுங்கப்பா.. என்று நக்கலடிக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











