கவின் காதல் விளையாட்ட காட்றத முதல்ல நிறுத்துங்க.. இரிட்டேட் ஆகுது..டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை பார்க்கவே விரும்பவில்லை, அவரின் காதல் விளையாட்டுக்களை தயவு செய்து காட்டாதீர்கள் என நெட்டிசன்கள் கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், அங்குள்ள பெண்களிடம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் கடலை போடுவதையுமே முக்கிய வேலையாக கொண்டுள்ளார். குறிப்பாக அவர்கள் அனைவரும் மச்சான் மச்சான் என பேசிக்கொள்வதை காது கொடுத்தே கேட்க முடியவில்லை.
கவினின் மொத்த பேரும் டேமெஜ் ஆகியுள்ள நிலையில் அவரை பார்த்தாலே இரிட்டேடிங் ஆகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் கவின் மீது காதல் வந்தது போல் நடந்து கொள்கிறார் லாஸ்லியா.

கடுப்பான நெட்டிசன்ஸ்
இதனை பார்த்ததும் நெட்டிசன்கள் இன்னும் கடுப்பாகியுள்ளனர். வழக்கமாக கவின், லாஸ்லியாவிடம் சென்று என்னை அண்ணன் என அழைக்காதே, அப்படி இப்படி என கடலை போடுவார். இந்நிலையில் கவினின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை கவின் கரெக்ட் பண்ணிட்டாரோ என யோசிக்க தொடங்கிவிட்டனர்.
இரிட்டேட்டிங் கவின்
அந்த வீட்ல யாரும் இல்ல போல எப்போ பாரு இரிட்டேட்டிங் கவின் என கவினை புரமோவில் காட்டுவதை இந்த பிடிக்காமல் வேறு யாரும் இல்லையா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
லாஸ்லியா ஆர்மி வாங்க
டேய் லாஸ்லியாவ டென்ஷன் பண்ணிட்டான் இந்த கவின் என்ன பண்ணலாம்- டேய் லாஸ்லியா ஆர்மி எல்லாரும் வாங்கடா வேணா வேணாம்னு சொன்னாலும் இந்த கவின் கேட்க மாட்டேங்குறான். என கடுப்பாகிறார் இந்த நெட்டிசன்.
பெரிய ஏமாற்றம்
கவின் நீங்க இப்படியே பொம்பள பசங்கக்கிட்டயே பேசி பேசி சுத்தி வந்து 100 நாள் அங்க இருந்துட்டு வந்துருங்க.. வீட்ல இருக்குற ஆம்பளைங்க கண்ணுக்கே தெரியாது போல.. உண்மையிலேயே உங்களால பெரிய ஏமாற்றம்... ச்சை.. என தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்.
சும்மா விடக்கூடாது
தலைவிய சோகமாக்கின கவின சும்மா விட கூடாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
முதலில் நிறுத்துங்கள்
ப்ளீஸ் கவினின் அறிவுக்கெட்ட காதல் விளையாட்டுக்களை புரமோ மற்றும் எபிசோடில் காட்டுவதை நிறுத்துங்கள்.. ரொம்பவும் இரிட்டேட்டிங் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











