டைட்டில் வின்னருக்கு மீண்டும் வாய்ப்பா?.. சரிகமப ஷோவில் ஆஸ்கர் லெவல் டிராமா.. கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: பத்து பதினைந்து வருடத்திற்கு முன் தொலைக்காட்சி சேனல்கள் ஒன்று, இரண்டு என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருந்தன. ஆனால். இப்போ, எந்த சேனலை பார்க்கிறோம் என்றே தெரியாத அளவிற்கு பல டிவி சேனல்கள் வந்துவிட்டன. இந்த சேனல்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக, குரங்கு தொப்பியை அவுத்த கதையாக, ஒரே கான்சப்டை அனைத்து சேனல்களும் காப்பி அடித்து, புது புது பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர். அதிலும், தில்லு முல்லு செய்து, நிர்வாகத்திற்கு வேண்டியவர்களை போட்டியில் ஜெயிக்க வைக்கும் வேலையும் நடந்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது சில டிவி சேனல்கள் சந்தித்துள்ளன. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் அதே ஷோ இன்னொரு சேனலிலும் உருவாகும் போட்டியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக பார்த்துள்ளனர். இடையே சில பித்தலாட்டங்களையும் டிவி சேனல்கள் செய்யும் போது அதற்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிக்கவும் செய்கின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது எல்லாமே ஒரு வியாபாரம் தான் என்பது நன்றாக தெரிகிறது. இப்படிப்பட்ட சர்ச்சையில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி சிக்கி உள்ளது.

சரிகமப சீனியர்ஸ் 5: ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிவடைந்ததைத் தொடர்ந்த இந்த ஞாயிற்றுக்கிழமை சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பானது. இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த வாரம் மெகா ஆடிஷன் மூலமாக போட்டியில் பங்கேற்க உள்ள இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த, ஸ்ரீவாணி கலந்து கொண்டு, கன்னட மொழி பாடலைப்பாடி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் சிறப்பாக பாடினார், அவரது குரலில் இனிமை, கம்பீரம் இருந்தது, அவர் போட்டியாளராக தேர்வு செய்யப்பட தகுதியானவர் தான்.

எல்லாம் ஏமாத்து வேலை: ஆனால், இந்த ஸ்ரீவாணி, ஏற்கனவே ஜீ கன்னட சேனலில் ஒளிபரப்பாகி வந்த சரிகபம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சிறப்பாக பாடி, ஃபைனல் வரை சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியிலும் நடுவராக பாடகர் விஜய் ஸ்ரீ பிரசாத் தான் இருந்தார். ஏற்கனவே ஓராண்டுக்கும் மேலாக, ஒரு நிகழ்ச்சியில் பாடி, அதற்காக பயிற்சி எடுத்த ஒரு பெண்ணை இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பாடவைத்து தேர்ந்தெடுத்து, அவரை, பாடலில் எந்தவிதமான பயிற்சியும் இல்லாதவர்களுடன் மோதவிடுவது எந்த வகையில் நியாயம். இது எல்லாம் தெரிந்து இருந்தும், பாடகர் விஜய் ஸ்ரீ பிரசாத், அந்த பெண் யார் என்றே தெரியாதது போல, அவரை அழைத்து, பாடவைத்து ரசிக்கிறார். இப்படி நடிக்கும் விஜய் ஸ்ரீ பிரசாத்திற்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்றும், அனைத்துமே ஸ்கிரிட் தானே என்றும், உண்மையான திறமையாளர்கள் வெளியில் வரவே முடியாதா என இணையத்தில் நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











