என்ன இப்படி கட்டிப்புடிச்சி கிராஸ் பண்றாங்க.. இம்யூனிட்டி டாஸ்க்கை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோவின் சனிக்கிழமை எபிசோடில் போட்டியாளர்களுக்கு இம்யூனிட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Recommended Video

Kodiyil Oruvan Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil

மர பாலத்தில் வரிசையாக போட்டியாளர்கள் நின்று கொண்டு கடைசியாக இருக்கும் போட்டியாளர் ஒவ்வொருவரையும் கிராஸ் செய்து வர வேண்டும்.

ஆண் போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களும் கட்டிப்பிடித்து கிராஸ் பண்ணுவதை பார்த்த ரசிகர்கள் இது என்ன கொடுமைடா என பல இடங்களில் டிவியையே ஆஃப் பண்ணி விட்டனராம்.

மோசமான உடை

மோசமான உடை

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட சர்வைவர் நிகழ்ச்சியில் பல பெண் போட்டியாளர்கள் அணிந்துள்ள உடை மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்க்க முடியவில்லை என்றும் இளைஞர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். அதிலும், பார்வதி, ஐஸ்வர்யா, காயத்ரி ரெட்டியின் உடை ரொம்பவே மோசமாக இருப்பதாக கூறுகின்றனர்.

கட்டிப்பிடித்து கிராஸ் பண்ணனும்

கட்டிப்பிடித்து கிராஸ் பண்ணனும்

நேற்றைய எபிசோடில் இடம்பெற்ற இம்யூனிட்டி டாஸ்க்கில் மரப் பாலத்தில் காடர்கள் மற்றும் வேடர்கள் அணியினர் தனித் தனியாக நின்று கொண்டு இந்த போட்டியை செய்து முடித்தனர். கடைசியாக நிற்கும் போட்டியாளர் மற்ற போட்டியாளரை கிராஸ் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனையால் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை கட்டிப்பிடித்து கிராஸ் பண்ண வேண்டிய நிலை உருவானது.

அசத்திய விஜயலட்சுமி

அசத்திய விஜயலட்சுமி

காடர்கள் அணியை சேர்ந்த விஜயலட்சுமி முன் பக்கமாகவே ஆண் போட்டியாளர்களையும் பெண் போட்டியாளர்களையும் கட்டிப் பிடித்து அவர்கள் மேல் பேலன்ஸ் செய்து தனது இலக்கை அடைந்தார். நீச்சல் பெரிதாக தனக்கு தெரியாத ஒரே காரணத்தால் தண்ணீரில் விழுந்து விடக் கூடாது என்கிற குறிக்கோளுடன் கடந்ததாக கூறினார்.

சங்கடப்பட்ட சரண்

சங்கடப்பட்ட சரண்

வடசென்னை, நெற்றிக்கண் படங்கள் மூலம் பிரபலமான நடிகர் சரண் காடர்கள் தலைவி காயத்ரி ரெட்டியை கட்டிப்பிடித்து கிராஸ் பண்ண ரொம்பவே கூச்சப்பட்டார். கீழே அமர்ந்து கால்களுக்கு இடையில் புகுந்து கிராஸ் செய்யலாமா என்கிற பல வித்தைகளை முயற்சித்து பார்த்தும் அவரால் முடியவில்லை.

பின் பக்கமாக சென்ற ஐஸ்வர்யா

பின் பக்கமாக சென்ற ஐஸ்வர்யா

விஜயலட்சுமி போல முன் பக்கமாக கட்டிப் பிடித்து செல்ல கூச்சப்பட்ட ஐஸ்வர்யா வித்தியாசமாக யோசித்து பின் பக்கமாக போட்டியாளர்களை கட்டிப்பிடித்தபடியே கடந்து சென்று தனது இலக்கை அடைந்தார். வேடர்கள் அணியினர் தொடர்ந்து சரியான யுக்தியை பயன்படுத்தி இலக்கை அடைந்தனர்.

சொதப்பல் ராம்

சொதப்பல் ராம்

காயத்ரி ரெட்டியின் துணையோடு வெளியேறாமல் காப்பாற்றப்பட்ட ராம் இந்த போட்டியிலும் ரொம்பவே சொதப்பி தனது அணியினரை அடிக்கடி தண்ணீரில் தள்ளி விட்டு தானும் விழுந்து அனைவரையும் கடுப்பாக்கினார். இனியும் அவர் இந்த சர்வைவர் போட்டிக்கு ஃபிட் ஆனவர் கிடையாது என இரு அணிகள் மற்றும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

வேடர்கள் வெற்றி

வேடர்கள் வெற்றி

காடர்கள் தொடர்ந்து கடலில் விழுந்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வேடர்கள் அணியில் தூண் போல இருந்த ரவியின் துணையால் ஒட்டுமொத்த வேடர்களும் சுலபமாக கடந்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வேடர்கள் தலைவி லக்‌ஷ்மி பிரியாவுக்கு அர்ஜுன் இம்யூனிட்டி வாள் ஒன்றை பரிசாக அளித்தார். அது இருக்கும் வரை வேடர்கள் அணியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள் என்கிற உறுதியையும் அளித்தார்.

இதெல்லாம் ஒரு டாஸ்க்கா

இதெல்லாம் ஒரு டாஸ்க்கா

சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் இப்படி கட்டிப்பிடித்து கிராஸ் பண்ணுவதெல்லாம் ஒரு டாஸ்க்கா என்று கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், ராம் மற்றும் காடர்கள் அணி தலைவி காயத்ரியை உடனடியாக நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்புங்கள் கொஞ்சம் கூட காயத்ரி ரெட்டி ஒரு கேப்டனாக செயல்பட வில்லை என திட்டித் தீர்த்து வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X