கேமராமேன் கூடவே நடக்கிறாரே.. அதுக்குள்ள போரடிச்சிடுச்சா? பறக்கும் பிக் பாஸ் vs சர்வைவர் மீம்ஸ்!

சென்னை: ஜீ தமிழில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 5க்காக காத்திருப்பதாக ஏகப்பட்ட மீம்கள் குவிந்து வருகின்றன.

அர்ஜுன் தொகுத்து வழங்க விக்ராந்த், நந்தா, சரண், லக்‌ஷ்மி பிரியா, காயத்ரி ரெட்டி என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ள சர்வைவர் ஷோவில் ரியாலிட்டி ரொம்பவே மிஸ் ஆகுதுன்னு ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும், ஒரு வாரம் கூட முடியாத நிலையில், நிகழ்ச்சி ரொம்பவே போராக செல்வதாகவும் கமெண்ட்டுகள் வரத் தொடங்கி உள்ளன.

சரி புரமோ எங்கே

சரி புரமோ எங்கே

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பக்க பலமே அன்றைய ஷோ குறித்து வெளியாகும் மூன்று முதல் நான்கு புரமோக்கள் தான். புரமோவில் அன்றைய தினம் யாருக்கும் யாருக்கும் சண்டை நடக்கப் போகிறது. ரொமான்ஸ் டிராக், காமெடி டிராக் என பல்வேறு விஷயங்களை காட்டி வைரலாக்கிய நிலையில், சர்வைவர் புரமோக்கள் முதல் நாள் எபிசோடில் நாளை என்று காட்டும் காட்சிகளே புரமோக்களாக வருவதால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

சர்வைவர் பார்க்க போனது தப்பு தான்

சர்வைவர் பார்க்க போனது தப்பு தான்

இக்கறைக்கு அக்கறை பச்சை போல நினைத்து சர்வைவர் தமிழ் ஷோ ஆரம்பமானதும் டாஸ்க் எல்லாம் ரொம்ப டஃப்பா இருக்கேன்னு அதை பார்க்க போன ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியே ஒரு செட்டிங் போல இருப்பதாக ஃபீல் பண்ணி மறுபடியும் பிக் பாஸ் பக்கமே திரும்புவதாக வெளியாகி உள்ள இந்த மீம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவதை போலவே கடந்து வந்த பாதை என்கிற எபிசோடு நேற்று போட்ட மொக்கை தான் இப்படி அதிரடியாக சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி குறித்த நெகட்டிவ் மீம்கள் குவிய காரணம் என்றும், இதே போல சென்டிமென்ட் அழுகாச்சியை வைத்து சர்வைவர் நிகழ்ச்சியை நடத்தினால் கடையை இழுத்து மூட வேண்டியது தான் என நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

நெருப்பு எந்த டீமுக்கு வேண்டுமோ அந்த டீம் இதில் வெற்றி பெற வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்களை ஆரம்பத்தில் போட்ட நடிகர் அர்ஜுன் அந்த டாஸ்க் சரியாக போகாத நேரத்தில் எப்படியாவது சீட் பண்ணியாவது முடிங்கடா என்கிற ரேஞ்சுக்கு மாறிவிட்டார் என்பதை இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் காமெடியுடன் கலாய்த்து வருகின்றனர்.

அப்பட்டமா தெரியுது

அப்பட்டமா தெரியுது

பெசண்ட் ரவியும் அஜ்மத்தும் இணைந்து மரவள்ளி கிழங்கு எடுத்து சாப்பிடும் காட்சிகள் எல்லாம் அப்பட்டமா நடிப்புன்னு தெரியுது. மக்களை இப்படியெல்லாம் ஏமாற்ற நினைக்காதீங்க என நெட்டிசன்கள் ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக பார்த்து சர்வைவர் ஷோவை கிண்டலடித்து வருகின்றனர்.

கேமராமேன் கூடவே போறாங்க

கேமராமேன் கூடவே போறாங்க

பிக் பாஸ் மாதிரியே சர்வைவர் ஷோவையும் எதிர்பார்த்த ரசிகர்கள் போட்டியாளர்கள் கூடவே கேமராமேன் நடந்து போவது, வித விதமான ஆங்கிளில் கேமரா ஷாட்களை எடுப்பது மற்றும் பிகில் பாண்டியம்மா பிரபலம் இந்திரஜா சங்கர் கேமராவை பார்த்தே பேசுவது உள்ளிட்ட காட்சிகளை பார்த்து ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

போர் அடிச்சுடுச்சா

போர் அடிச்சுடுச்சா

"என்னப்பா இது 10.23 க்கே #SurvivorTamil முடிச்சுட்டீக ஒரு 1/2 மணி நேரம் கூட போடல உங்களுக்கே போர் அடிச்சுடுச்சா..." என சர்வைவர் தமிழை நெட்டிசன்கள் கிண்டலடிக்க தொடங்கி விட்டனர். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் இந்த மாற்றம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரமாக மாறியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 எப்படி வரப் போகுதுன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X