சில்லறைத்தனமான சீரியல்.. முடிச்சிவிடுங்கப்பா.. எதிர்நீச்சல் சீரியலை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், நடிகர் வேலன் ராமமூர்த்தி, சத்யபிரியா, கனிகா, இசைப்பிரியா, விபு ராமன், சபரி பிரசாத், கமலேஷ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அந்த ரோலில வேலன் ராமமூர்த்தி நடித்து வருகிறார். கடந்த மாதமாக இந்த சீரியலின் போங்கே சரியில்லை என இணையத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலின் முதல் பாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்தது தொடர்ந்து, தற்போது, எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் துணிச்சலாக வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் விசாலாட்சிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மீண்டும் வீட்டுக்கு வருவதில் இருந்து கதை தொடங்கியது.

கதையே இல்லை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு துறையில் சாதித்து முன்னேறி வந்தது போல காட்டி இருந்தார் இயக்குநர் திருச்செல்வம். ஆனால், இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு வீட்டிற்கு வந்த, நான்கு பெண்களையும் ஆண்களால் அடக்கப்படுவது போல தொடர்ந்து காட்சிகளும், வசனங்களும் காட்டப்படு வருகிறது. பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல தொடராக தொடங்கப்பட்ட இந்த சீரியல், கடந்த சில வாரங்களாக செல்லும் போங்கே சரியில்லை. சிறை இருந்த ஆதி குணசேகரன் பரோலில் வெளியே வந்து, ஜனனி பழிவாங்க நினைத்தார். தற்போது, ஜாமீன் கிடைத்து குடும்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறார். கடந்த மாதம் முழுக்க மணி விழா நடத்துவது பற்றியும், அது நடக்குமா... நடக்காதா என்பதை சுற்றியே கதை சென்றது.

Ethir Neechal thodargirathu Netizens troll

திருச்செல்வம் இப்படி செய்யலாமா: அதைத்தொடர்ந்து, நந்தினி மகள் தாராவின் சடங்கு பற்றி கடந்த இரண்டு வாரங்களாகவே சீரியல் சென்று கொண்டிருக்கிறது. தாராவிற்கு சடங்கு செய்வது யார்.. சீர் செய்வது யார் என்பதை சுற்றியே கதை செல்கிறது. நந்தினி மட்டுமில்லாமல் நான்கு பெண்களுமே சடங்கு செய்வதில் தான் மொத்தமானமும் இருப்பது போல கதையின் ஓட்டம் செல்கிறது. சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் வேண்டும் தான். ஆனால், அதையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருக்கக்கூடாது. அதேபோல, கதிர், அடிக்கடி நந்தினியை அடிக்கப்பாய்வது போல காட்சிகள் வருகிறது. ஏற்கனவே, பெண்கள் ஆண்களால் அடக்கப்படுவதும், அடிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை டிவியில் தினமும் போட்டுக்காட்டி, பெண் ஓவராக பேசினால், தூக்கிப்போட்டு மிதிக்கலாம் என்ற எண்ணத்தை வளர்ந்து விடுவது சரியில்லை, இதுவும் திருச்செல்வம் போன்று பெண்களை மதிப்பவர் இப்படி செய்யலாமா என்பது பலரின் கருத்தாக உள்ளது.

சில்லறைத்தனமான சீரியல்: அதே போல, இணையத்திலும், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். சில்லறைத்தனமான வசனங்கள் என்றும், சீரியல் தொடங்கும் போது குடுத்த பில்டப் புக்கும், இப்போது சீரியல் போகும் போக்கக்கும் எந்த சம்மதமும் இல்லை, இந்த நாடகத்தில் இல்லாத வக்கிரம் வேறெங்கும் இல்லை, சீக்கிரம் சீரியலை முடிச்சி விடுங்கப்பா என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X