அடக்கம்ஸ் vs அடங்காத வைப்ஸ்.. விஜே பார்வதி போட்ட போஸ்ட்.. குவிந்த கமெண்ட்டுகளை பார்த்தீங்களா?
சென்னை: பெண்களின் உடையை வைத்து கமெண்ட் அடித்தாலே சர்ச்சை வெடித்து வரும் நிலையில், அடக்கம்ஸ் vs அடங்காத வைப்ஸ் என விஜே பார்வதி வெளியிட்டுள்ள கம்பேரிசன் புகைப்படத்துக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தொகுப்பாளினியான பார்வதிக்கு இணையத்தில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர்.
க்ரூப் டூராக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது, சோஷியல் மீடியாவில் அடிக்கடி போஸ்ட் போடுவது என இவரும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராகவே வலம் வருகிறார். சமீபத்தில், யூடியூபர் இர்ஃபானை இவர் வெளுத்து வாங்கியது வைரலானது.

ஆனால், இர்ஃபான் உடன் இவரும் ஆரம்பத்தில் வீடியோ எல்லாம் போட்டு வந்தாரே என்கிற கேள்விகளையும் கேட்க நெட்டிசன்கள் தவறவில்லை. மோகன்லால் போன்ற பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது இர்ஃபான் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என இவர் விமர்சித்ததை பலரும் வரவேற்றனர்.
அடக்கம்ஸ் vs அடங்காத வைப்ஸ்: கண்ணாடி அணியாமல் சுடிதார் அணிந்துக் கொண்டு நெற்றியில் பொட்டு, தலையில் மல்லிகைப்பூ என வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அடக்கம் என்றும் இன்னொரு பக்கம் பார்ட்டிக்கு செல்வது போல மாடர்ன் உடையை அணிந்துக் கொண்டு பொட்டு, பூவெல்லாம் வைக்காமல் கண்ணாடியை போட்டுக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அடங்காத வைப்ஸ் என்றும் விஜே பார்வதி தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு எந்த லுக் நல்லா இருக்கு? என்கிற கேள்வியையும் தனது ரசிகர்களை பார்த்து கேட்டுள்ளார்.
திட்டும் ரசிகர்கள்: இரண்டுமே உங்களுக்கு ஃபயராக இருக்கு பாரு என்றும் அடக்கம் தான் அமரருள் உய்க்கும் அடங்காத பாரு வேண்டாம் என விஜே பார்வதியின் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் வழக்கமாக இன்னைக்கு ஒருத்தர் சிக்கிட்டாரு டோய் என கலாய்த்தும், விஜே பார்வதியை மோசமாக திட்டியும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். "த ச்சி ப்பே" என்றும் இரண்டு லுக்கிலும் நீ சுமார் தான் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஆல்ரெடி ஆள் இருக்கும்: சிம்புவோட போட்டோவை வெளியிட்ட நெட்டிசன் ஒருவர், "பேசாம இந்த புள்ளைய கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றும் வேணாம், அல்ரெடி ஆள் இருக்கும்" என்றும் கமெண்ட் அடித்துள்ளார். "டிரஸ் போடமா கூட சுத்து பைத்தியம் எப்படிவேனாலும் இருக்கலாம் ஆனா புரட்சினு மட்டும் வராதீங்கடி" என வச்சு செய்து வருகின்றனர்.
மாடர்ன் டிரெஸ் போட்டா அடங்காத பொண்ணா?: மாடர்ன் டிரெஸ் போட்டா அடங்காத பொண்ணா? இதையே ஒரு பையன் சொல்லியிருந்தா ஃபெமினிஸ்ட் க்ரூப்லாம் வந்து கடிப்பீங்களேன்னு இன்னொரு நெட்டிசன் விளாசித் தள்ளியுள்ளார்.
ஐஸ்வர்யா ரகுபதி சர்ச்சை: சமீபத்தில் தான் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி கை வைக்காத ஜாக்கெட் அணிந்துக் கொண்டு சேலையில் பட விழாவை தொகுத்து வழங்கிய போது அவரது ஆடை சம்மருக்கு ஏத்த ஆடையா? என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதும் அவரை பலரும் கடுமையாக சாடினர். யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரகுபதியும் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜே பாரு இப்படியொரு போஸ்ட் போட்டு விவாதத்தை கிளப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











