யாஷிகா, நீங்க அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாதே

By Siva

சென்னை: மகத் பற்றி கமலிடம் பெருந்தன்மையாக பேசிய யாஷிகாவை பார்த்து தான் பார்வையாளர்கள் நீங்க அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாதே என்கிறார்கள்.

பிக் பாஸ் 2 வீட்டில் இந்த யாஷிகாவும், மக்தும் அடித்த லூட்டி இருக்கே யப்ப்பா சொல்ல முடியாத அளவுக்கு நடந்து கொண்டார்கள். கேட்டால் நண்பர்கள் என்று சப்பை கட்டு கட்டினார்கள்.

இந்நிலையில் யாஷிகா மகத்தை காதலிப்பதாக கமலிடம் ஒப்புக் கொண்டார்.

யாஷிகா

யாஷிகா

மகத் மீது காதல் வந்தது உண்மை தான். அவருக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது நான் அதை மதிக்கிறேன் என்று யாஷிகா பெருந்தன்மையாக கூறியதை கேட்டு கமல் மற்றும் பார்வையாளர்களுக்கு அவர் மீது மரியாதை வந்தது. சின்னப் புள்ளையாக இருந்தாலும் எவ்வளவு பெருந்தன்மையாக பேசுது பார் என்றார்கள்.

மகத்

மகத்

மகத் பெயர் இனியும் கெடாமல் இருக்கத் தான் அப்படி சொன்னேன் என்று யாஷிகா சக போட்டியாளர்களிடம் கூறியபோதே பார்வையாளர்களின் மதிப்பை இழந்துவிட்டார். தனக்கு காதலர் இருப்பதை கூறாமல் மகத்தின் பெயரை காப்பாற்ற அப்படியே விட்டுக் கொடுத்தது போன்று பில்ட்அப் கொடுத்த யாஷிகாவை பார்த்த பார்வையாளர்கள் இது உலக மகா நடிப்புடா சாமி என்று நொந்து கொண்டார்கள். ஒரே நிமிடத்தில் பெயரை கெடுத்துக் கொண்டார் யாஷிகா.

காதலி

யாஷிகாவுக்கு காதலர் இருக்கிறார், மகத்திற்கு காதலி இருக்கிறார். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் அவர்களுக்கு இடையே நட்பையும் தாண்டிய உறவு ஏற்பட்டதை ஒப்புக் கொண்டதை பார்த்த பார்வையாளர்கள் துப்புகிறார்கள்.

கமல்

கமிடம் உண்மையை சொன்னது மகத்தின் பெயரை காப்பாற்றத் தான் என்று யாஷிகா கூறியதை கேட்டு ஒரே குழப்பமாக இருக்கு பாஸ். யாஷிகாவின் அடேங்கப்பா விளக்கத்தை கேட்ட மகத்துக்கும் கோபம் வந்தது. இருந்தாலும் ஏற்கனவே இமேஜ் டேமேஜ் ஆகியுள்ளதால் அமைதி காத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X