வைல்ட்கார்டுல காயத்ரியையும் ஜூலியையும் உள்ள இறக்குங்க.. அப்புறம் பாருங்க..! #பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி கொஞ்சமும் சுவாரசியம் இல்லாமல் செல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி கொஞ்சமும் சுவாரசியம் இல்லாமல் செல்வதாக கூறியுள்ள நெட்டிசன்கள் ஜூலியையும் காயத்ரியையும் வைல்ட்கார்டில் உள்ளே இறக்குமாறு கூறியுள்ளனர்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.
ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் நடிப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் அவரவாக இருந்ததால் இருந்த சுவாரசியம் பிக்பாஸ் சீசன் 2வில் இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கட்டிப்பிடிக்க ஆள் இல்லை
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி அடித்த கூத்துகள் சொல்லிமாளாது. என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என்று கூறி வைரலான ஜூலி, இன்று சினிமா ஹீரோயின் ஆகியுள்ளார்.

கெட்டவார்த்தையால் ஃபேமஸ்
அடுத்தபடியாக காயத்ரி, அவர் பேசிய கெட்ட வார்த்தைகளும், ஓவியாவை ஓரம்கட்டி பேசியதையும் எளிதில் மறக்க மாட்டார்கள் ஓவியா ஆர்மிக்காரர்கள். காயத்ரியை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதே நிகழ்ச்சியின் வெற்றி என கொண்டாடினார்கள்.

வைல்ட்கார்டில் இறக்குங்க
ஆனால் தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி எந்த சுவாரசியமும் இல்லாமல் செல்வதால் காயத்ரியையும், ஜூலியை வைல்ட்கார்டில் உள்ளே கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.
முக்கியமா அந்த டேனியல்
எப்படி இருந்த ஐஷ்வர்யா இப்படி ஆயிட்டாங்க.. சீக்கிரம் நலம் பெறுக.. சேர்க்கை சரியில்ல.. முக்கியமா அந்த டேனியல்
ஒரே பிக்பாஸ்
ஒரே ஓவியா ஒரே பிக்பாஸ் முடிஞ்சு போச்சு..
#BiggBossTamil2
பொருந்தாமல் போகுது
இந்த சீசன் அங்க இருக்க லைவ் ஆடியன்ஸ் claps கூட கேவலமா unsinkல இருக்கு...
ரத்தக்களரியாக்கி..
நேரடியா சண்டை மூட்டி ரத்தக்களரி ஆக்கியாச்சும் டி.ஆர்.பி ஏத்தனும்னு பாக்கறீங்க ம்ஹுஹும் இந்த டீமே செட் ஆகல யூ நோ
அவங்களை போடுங்க
பிக்பாஸ் ஒர்த்தே இல்ல.. வறட்சியா போகுது.
இந்த காயத்ரியையும் ஜூலியையும் உள்ள போடுங்க வைல்ட்கார்டுல..
அப்புறம் பாரு..


Click it and Unblock the Notifications











