பவர் ஸ்டார் எங்கய்யா.. காத்திருந்து ஏமாந்து போன ரசிகர்கள்!
சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் நடிகர்கள் மயில்சாமி, நடிகை கஸ்தூரி மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர்கள் அடிப்பட்டன.

ரசிகர்கள் ஏமாற்றம்
இந்நிலையில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 போட்டியாளர்களில் மயில்சாமியும் பவர் ஸ்டார் சீனிவாசனும் இடம் பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இன்னும் இரண்டு பேர் யார்?
ஆனால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசன் கையில் 17 போட்டியாளர்களின் கார்டுகளை வைத்திருந்தார். நேற்று 15 போட்டியாளர்களை பிக்பாஸ் விட்டுக்குள் அனுப்பிய கமல் மற்ற இரண்டு பேர் இடையில் வருவார்களா என்ற கேள்விக்குறியோடு முதல் எபிசோடை முடித்தார்.
ஆர்மி தொடங்க காத்திருக்கிறோம்
பவர் ஸ்டார் பிக்பாஸ் வீட்டிற்கு வராததால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் டிவிட்டரில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில..
ஏமாத்திட்டாங்க டியர்... பல பேர் பவர் ஸ்டார் ஆர்மி தொடங்க இங்கு காத்திருக்கிறோம்.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்
எங்கே தலைவன்?
எங்கே தலைவன் பவர் ஸ்டார்... என கேட்கிறார் இந்த நெட்டிசன்
பவர் ஸ்டாருக்காக வெய்ட்டிங்
எங்க தலைவர் பவர் ஸ்டாருக்காக வெய்ட்டிங்.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்..
ஒன் அன்ட் ஒன்லி
என்னுடைய ஆதரவு ஒன் அன்ட் ஒன்லி பவர் ஸ்டார் தான்.. என்கிறார் இந்த ரசிகர்
ஆனால் பவர் ஸ்டார் எங்கே?
நம்பிக்கைக்குரிய போட்டியாளர்கள்! கவின், தர்ஷன், ஷெரின், முகென் ராவ், சாண்டி, லொஸ்லியா, மோகன் வைத்யா, எல்லாருக்குள்ளேயும் ஒரு ஃபையர் இருப்பதாக தெரிகிறது.. இந்த சீசன் நன்றாக செல்லும் திறன் உள்ளது. அவர்களின் நடத்தை தான் அதனை நிரூபிக்கும்.. ஆனால் தலைவர் பவர்ஸ்டார் எங்கடா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











