பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறபோவது யார்? வெளியேற்றப்பட வேண்டியது யார்?
சென்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படவேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். மக்களின் வாக்கு அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெறும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் எவிக்ஷன் புராசஸ் கடந்த வாரம் தொடங்கியது. அதன்படி இன்று வெளியே போகும் நபர்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் நபராவார்.

ஃபாத்திமா பாபு
இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் உள்ள 7 பேரில் சாக்ஷியை தான் முதலில் வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அவர் வெளியேற்றப்பட்டால் கன்டென்ட் கிடைக்காது என்பதால் அமைதியாக அனைவரையும் அரவணைத்து செல்லும் ஃபாத்திமா பாபுவை பிக்பாஸ் வெளியேற்றலாம் என்றும் கூறி வருகின்றனர்.

சந்தோஷம்
மேலும் சாக்ஷியுடன் சேர்த்து கவினை வெளியே அனுப்பினாலும் சந்தோஷம் தான் என்கின்றனர் நெட்டிசன்கள். எனெனில் இருவரும் அடிக்கும் லூட்டிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. கவின் பெண்கள் பின்னாடி சுத்துவதும் அவர்களை தடவுவதுமாக நேரத்தை கழித்து வருகிறார்.

இருவரும் சென்றால் மகிழ்ச்சி
சாக்ஷி இல்லாததை கொளுத்தி போட்டு குளிர்காய்ந்து வருகிறார். மொத்ததில் இருவரின் நடவடிக்கையுமே சரியில்லை. ஆகையால் இருவரும் வெளியே சென்றால் மகிழ்ச்சி என்கின்றனர் நெட்டிசன்கள்.
டபுள் தமாக்கா
எனது சாய்ஸின்படி சேவ் பண்ண வேண்டிய போட்டியாளர்கள்,மீரா, சேரன், ஃபாத்திமா, மது, சரவணன்.. எங்களுக்கு டபுள் தமாக்கா வேணும் பிக்பாஸ், அதனால் கவினையும் சாக்ஷியையும் ஒன்றாகவே வெளியேற்றிவிடுங்கள் என்கிறார் இவர்.
ஃபேக்குன்னு அர்த்தம்
இந்த வாரம் சாக்ஷி தான் எலிமினேட் ஆகனும்... அப்படி இல்லாம ஃபாத்திமா பாபு எலிமினேட் ஆனாங்கன்னா இது ஃபேக்குன்னு அர்த்தம் என்கிறார் இந்த நெட்டிசன்.
அம்புட்டும் வெசம்
இன்னைக்கு சாக்ஷி மட்டும் எலிமினேட் ஆனான்னா சந்தோஷ படுற முதல் ஆள் நான் தான்.. அம்புட்டும் வெசம் வெசம் வெசம்.. என்கிறார் இவர்.
செம ட்ரீட் இருக்கு போல
என்னங்கடா அதுக்குள்ள புரமோ போட்டுட்டிங்க.. ஆண்டவர் செமயா பேசுறார்.. செம ட்ரீட் இருக்கு போல.. வெய்ட்டிங் என டிவிட்டியுள்ளார் இவர்.
சொதப்பாம இருந்தா சரி
புரமோலல்லாம் நல்லாதான் இருக்கு.. சொதப்பாம இருந்தா சரி என்கிறார் இவர்.
உள்ள இருக்க போறாங்க
ஓட்டு போடுறது எல்லாம் வேஸ்ட் நம்ம யார வெளிய அனுப்ப நினைக்கிறமோ அவங்கதான் கடைசி வர உள்ள இருக்க போறாங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











