வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியின் நட்பை சந்தேகப்பட்ட கவினிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாண்டியும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் லாஸ்லியா உடனான காதலுக்குப் பிறகு இருவரின் நட்புக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கவின், சாண்டி இடையே லாஸ்லியாவால் மனக்கசப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்றும் கவினுக்கும் சாண்டிக்கும் இடையிலான பிரச்சனை தொடர்ந்தது.

நெட்டிசன்ஸ் வார்னிங்

நெட்டிசன்ஸ் வார்னிங்

இதனால் வருத்தமடைந்த சாண்டி, கவினிடம் தன்னை தவறாக நினைக்க வேண்டாம் என உருக்கமாக பேசி புரிய வைக்கும் புரமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், கவினிடம் உங்கள் நட்பை புரிய வைக்காதீர்கள் அவர் அதற்கு தகுதியற்றவர் என சாண்டிக்கு வார்னிங் கொடுத்து வருகின்றனர்.

வொர்த் இல்ல சாண்டி

இப்போ வனிதா டயலாக் சூட்டாகும்.. வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அனைத்தும் மாறிவிட்டது

கவின், லாஸ்லியாவுடன் சேராமல் இருந்தால் இன்று சான்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கும்.. சேர்ந்த இடம் அனைத்தையும் மாற்றி விட்டது.. என்கிறார் இந்த நெட்டிசன்.

அழ வச்சுட்டீங்க

கடைசில சாண்டியும்.. அழ வைச்சுட்டீங்க.. கவின்-லாஸ்லியா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பக்கா கன்னிங் குள்ளநரி

சாண்டி, கக்கூஸ் கவின்கிட்ட இருந்து எந்த மரியாதையையும் இரக்கத்தையும் எதிர்பார்க்காதே. கவின் ஒரு பக்கா கன்னிங் குள்ளநரி.. ஜாக்கிரதையா இரு சாண்டி பாய் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

நட்பை முறிக்கும்

காதல் நட்பை முறிக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நண்பனா தோத்துட்ட கவின்

லவ்லையும் பிரன்ட்ஷிப்லையும் நம்பிக்கையின்மை வர கூடாது..இத்தனை வருஷம் நல்ல தோழனா இருந்த சாண்டிய, இன்னைக்கு, "தயவு செஞ்சு என்னை மட்டும் நீ சந்தேகபடாத டா"ன்னு அழ வச்சுட்ட கவின்...நண்பனா நீ தோத்துட்ட.....இனி பேசுனாலும் வேஸ்ட்.. நண்பனா இருக்க உனக்கு தகுதியில்ல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கிருமி போஜனம்

கவின் பிரயோஜனமா இல்லனாலும் பரவால்ல பிரச்சனை பண்ணாமயாச்சும் இருக்கனும். இவன் யாரையும் நிம்மதியா கேம் விளையாட விடமாட்டான் போல. இவன்'கிட்ட உஷாரா இருக்கறது சேரன், தர்ஷன், முகென் மட்டும்தான்...இந்த கிருமி'க்கு 'கிருமி போஜனம்' தண்டனைதான் கரெக்ட்டா இருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X