என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை கமல்ஹாசன் வறுத்தெடுத்ததை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் கவினை கமல்ஹாசன் வச்சு செய்வதும் வறுத்தெடுப்பதும் தெரியவந்தது. லாஸ்லியாவுக்கு மட்டும் வரிந்து கட்டும் கவினை வெளுத்து வாங்குகிறார் கமல்.
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் எதிர்பார்க்கிறோம் ஆண்டவரே என கமலை புகழ்ந்து டிவிட்டி வருகின்றனர்.
ஒரு நிமிடம் பயந்துட்டேன்
அப்பாடி எங்க லாஸ்லியாவையும் கவினையும் புகழ்ந்திட போறீங்களோ என்று ஒரு நிமிடம் பயந்திட்டேன் என்கிறார் இந்த நெட்டிசன்.
திருந்த மாட்டான்
நல்ல கேள்வி தான் ஆனா கவின் என்ன பண்ணுவான் முழிகிற மாதிரி பாத்துட்டு நாளைக்கு மறுபடியும் இதே தான் பண்ணுவான் திருந்தவா போறான் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ஆனால் நோ எவிக்ட்
எப்போதும் கவின் குறித்து நெகட்டிவாதான் பேசுறீங்க ஆனா எவிக்ட் மட்டும் ஆகறதில்ல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டிங்க
என்ன சார் பொசுக்குனு இப்படி கேட்டுட்டீங்க செருப்பால அடிச்ச மாதிரி என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
நாக்கை புடுங்கிறமாதிரி
கவினும் லாசும், வலியால் அவதிபட்ட சேரனை ஏன் கண்டுகொள்ளவில்லையென நாக்கை புடுங்கிறமாதிரி கேளுங்க கமல்சார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











