அடியே லாஸ்லியா.. நாமினேஷன்ல மாட்னீயா.. வச்சு செய்ய காத்திருக்கும் மக்கள்!
Recommended Video
சென்னை: லாஸ்லியாவின் பெயர் நாமினேஷனில் வந்திருப்பதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா, வந்த வேலையை விட்டுவிட்டு கவினுடன் கதைப்பதிலேயே மும்முரம் காட்டி வருகிறார். கவின் மீது காதல் கொண்டுள்ள லாஸ்லியா, அதனை நேரடியாக கூறாமல் உன்னை பிடிக்கும், உன்னுடன் கதைக்க பிடிக்கும், உன்னோடு பேசாமல் இருக்க இயலாது என காதல் வசனங்களை பேசி வருகிறார்.
மற்றவர்கள் கேட்கும் போது கவினுக்கும் எனக்கும் உள்ளது நட்பு மட்டுமே என்று கூறும் லாஸ்லியா, கவினிடம் உன்னை சைட் அடிப்பேன் என்கிறார். ஃபிரன்ட்ட கூட சைட் அடிப்பாங்களா என கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

வச்சு செய்கிறோம்
அதுவும் கடந்த சில நாட்களாக லாஸ்லியா ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. பேச்சில் திமிரும் ஆணவமும் கொடி கட்டி பறக்கிறது. இதனால் வெறுப்படைந்துள்ள ரசிகர்கள், நீ நாமினேஷனுக்கு வா, உன்னை வச்சு செய்கிறோம் என்றனர். அதன்படியே இன்றைய நாமினேஷனில் லாஸ்லியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

நாங்கள் பதில் சொல்றோம்
இதனை மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர் பார்வையாளர்கள். இதற்காகதான் காத்திருந்தோம் என்று கூறும் பார்வையாளர்கள் நீ ஆடிய ஆட்டத்துக்கும் உன் திமிருக்கும் இந்த முறை நாங்கள் பதில் சொல்கிறோம் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவாகும் கமென்ட்ஸ்கள்..
ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது
லாஸ்லியாவுக்கு ரொம்ப ஆணவம் ஆட்டிட்யூட். ரசிகர்களின் கைத்தட்டல்கள் அவரது தலைக்கு ஏறிவிட்டது என நினைக்கிறேன் என்கிறார் இந்த நெட்டிசன்.
வீட்டுக்கு அனுப்பி வைப்போம்
வாங்க லாஸ்லியா வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்று அழைக்கிறார் இந்த நெட்டிசன்.
வா வா வா
வா வா வா.. உன்னோட பெயர் எப்போது வரும் என்றுதான் காத்திருந்தோம் லூஸ்லியா என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
ஆட்டிட்யூட் அதிகமாயிடுச்சு
போய் தொலை லாஸ்லியா.. உனக்கு ஆட்டிட்யூட் அதிகமாயிடுச்சு என்கிறார் இந்த நெட்டிசன்.

அனுப்பியே ஆகனும்
கூகுள் ஆன்லைன் போல்ஸ்லல்லாம் லாஸ்லியா அதிகமா வோட் வாங்குன மாதிரிதான் காமிக்கும். ஏன்னா அவளுக்கு சப்போர்ட் பண்ற குரூப் எல்லாமே அவ நாட்டை சேர்ந்தவங்க. ஆனா ஹாட்ஸ்டார்ல நம்ம நாட்டு மக்கள்தான் ஓட்டு போட முடியும். இந்த வீக் இவள அனுப்பியே ஆகனும். என்று கூறுகிறார் இவர்.
நாமினேஷன்ல மாட்னீயா
அடியே லாஸ்லியா நாமினேஷன்ல மாட்னீயா என கவின் அவரை பார்த்து பாடிய பாடலை வைத்து கிண்டல் செய்துள்ளார் இவர்.
வீணாக்கிவிட்டனர்
அபிராமி இல்ல லாஸ்லியா இவர்களில் யாராவது ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இரண்டு பேரும் பிக்பாஸ் வீட்டிற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி விட்டனர். என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
திமிரா நடக்காத
செம.. சித்தப்பு, ஷெரின், சாக்ஷி ரொம்ப சரியா நாமினேட் பண்ணியிருக்கீங்க.. வரட்டும் நாமினேஷனுக்கு லாஸ்லியா மேடம்,, பாருடா இவங்க ரொம்ப உண்மையா பழகுறாங்க, சாக்ஷி பொய்யா இருக்காங்கலாம். உன்னை பார்த்தா சிரிப்பா இருக்கு லாஸ்லியா. முதல்ல நீ நிகழ் காலத்துக்கு வாமா, கேம ஒழுங்கா விளையாடு மத்தவங்களுக்கு மரியாதை கொடு திமிரா நடக்காத என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
லூஸ்லியா எவிக்ட் பண்ணிலாம்
மிக்ஸர் மாமி லூஸ்லியாவ எவிக்ட் பண்ணிடலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











