கக்கூலியா ஆர்மிலாம் ஒதுங்கு.. எங்கேயாவது போய் பதுங்கு! முகத்துல ஒரு கலவரம் தெரியுதே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா விஜயகுமார் என்ட்ரி ஆகியிருப்பதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறிய பிறகு மீராவை வைத்து ஓட்டி வந்தார் பிக்பாஸ். ஆனால் அதுவும் வேறுமாதிரி முடிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக படுத்துவிட்டது.

பிக்பாஸ் வீடும் சண்டை சச்சரவின்றி அமைதியாக உள்ளது. இதனால் டிஆர்பி அதளபாதளத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தலையில் துண்டு

தலையில் துண்டு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசனுக்காக கூட்டம் வந்தது. இப்படியோ போனால் தலையில் துண்டை போட வேண்டியதுதான என்பதை உணர்ந்த பிக்பாஸ் மீண்டும் வனிதாவை அழைத்து வந்துள்ளார்.

ஆர்மி மகிழ்ச்சி

ஆர்மி மகிழ்ச்சி

ஆனால் பிக்பாஸ் வீட்டில் வனிதா எத்தனை நாட்கள் இருக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. இதற்கான புரமோ வெளியானதை தொடர்ந்து வனிதா ஆர்மியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரசிகர்களும் நிகழ்ச்சி இனி சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் டிவிட்டியுள்ளனர். அவற்றில் சில,

வனிதா என்ட்ரி

வனிதா என்ட்ரிக்கு பிறகு லூஸ்லியா ரியாக்ஷன் இப்படிதான் இருக்கும் என்று கூறி ரெஸ்ட் இன் பீஸ் என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஒதுங்கு.. பதுங்கு

ஏய் எங்க தலைவி வந்தாச்சு.. கக்கூஸ்லியா ஆர்மியெல்லாம் ஒதுங்கு.. எங்கேயாவது போய் பதுங்கு என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பத்தவச்சுட்டு..

வாவ் வனிதா.. ரொம் அழகா இருக்கா.. ஆனா வந்து எப்படி பத்தவச்சுட்டு போகப்போறாங்களோ தெரியலை என்கிறார் இந்த நெட்டிசன்.

நைஸ் டிவிஸ்ட்

வா கா, வா கா, வா கா.. எங்கே எல்லாரும் நிம்மதியா இருக்கப்போறாங்களோன்னு நினைச்சேன், நைஸ் டிவிஸ்ட் பிக்பாஸ், அவர் பிக்பாஸ் ஹோட்டலில் ஒரு வாரம் விருந்தாளியாக இருக்கப்போகிறாரா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரு கலவரம் தெரியுதே

வாரேவா.. என்ன ஒரு ரீஎன்ட்ரி.. வனிதா அக்காடா.. இருக்குடா டேய்.. எதிர்பார்க்காத கெட்அப்ல வந்திருக்காங்க, விருந்தாளி பாத்திரத்தை சரியாக செய்வார் என நம்புகிறோம். இந்த முறை உங்களிடம் இருந்து சில பாஸிட்டிவ் வைப்ரேஷனை எதிர்பார்க்கிறோம், சண்டை விவாதம் கத்துதல் அல்ல. கவின், சாண்டி, லாஸ்லியா முகத்துல ஒரு கலவரம் தெரியுதே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கக்கூஸ் கப்ள்ஸ்

பார்க்க தான போற இந்த வனிதா அக்கா ஆட்டத்தை.. கஸ்தூரி மற்றும் வனிதா சேர்ந்து ஒரு வழி பண்ண போறாங்க.. கக்கூஸ் கப்ள்ஸ் சாவுங்கடா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X