பிக்பாஸில் இருந்து வனிதா வெளியேற்றம்.. இனிமே ஆளாளுக்கு பஞ்சாயத்து பண்ணுவாங்களே!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷன் முறைப்படு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை நல்ல என்டர்டெய்னராக இருந்தவர் வனிதா.
சண்டை மூட்டி விடுவது, போட்டுக் கொடுப்பது, பின்னால் பேசுவது, மற்றவர்களை மட்டம் தட்டுவது, யாரையும் மதிக்காமல் இருப்பது, கேங்க் ஃபார்ம் செய்வது என்றிருந்தார் வனிதா. இதனால் வனிதாவை சமூக வலைதளங்களில் திட்டாதவர்களே கிடையாது.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதால் நெட்டிசன்கள் கவலையடைந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இனி யார் வனிதா இடத்தை நிரப்புவார்கள் என்றும் இனி பிக்பாஸ் வீட்டில் யார் சண்டை மூட்டி விடுவார்கள் என்றும் நெட்டிசன்கள் கவலையடைந்துள்ளனர்.
கிரிக்கெட் முடிந்தது
வனிதா வெளியேறிவிட்டார், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் முடிந்துவிட்டது. இதனால் இனிமே கிரிக்கெட்டும் பாக்க முடியாது
பிக்பாஸும் பாக்க முடியாது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ரொம்ப பாரமாயிருக்கு
வனிதா டார்லிங் பிக்பாஸ் விட்டு வெளியேறுனதை தாங்கவே முடில! மனசு ரொம்ப பாரமாயிருக்கு!!சோகங்கள்!! என கூறியுயிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஆதரிப்பவர்கள்
#வனிதா அக்காவை எதிர்ப்பவர்களுக்கு சமமாக ஆதரிப்பவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வாழ்க்கை கொடுப்பாரா?
வனிதா வெளிய வந்துட்டாங்க வனிதாவுக்கு வாழ்க்கை கொடுப்பார பிக்பாஸ்??? என்கிறார் இவர்.
எலிமினேட் பண்ணியிருக்கக்கூடாது
#வனிதா அக்காவை எலிமினேட் பண்ணி இருக்க கூடாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அம்மையார் வெளியேற்றம்
கமல் "ரஜினி " அரசியலுக்கு வந்தா மாதிரி! இப்ப பிக்பாஸ் வீட்ல ஆள் ஆளுக்கு பஞ்சாயத்து பண்ணுவானுங்க #மாண்புமிகு அம்மையார் #வனிதா வெளியேற்றம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வாழ்க தலைவி
பிக்பாஸை வன்மையாக கண்டிக்கிறேன்.
தலைவி வனிதா வாழ்க தலைவி வனிதா வாழ்க தலைவி வனிதா வாழ்க தலைவி வனிதா வாழ்க தலைவி வனிதா வாழ்க என்று கூறுகிறார் இவர்.
ரத்தம் கக்கி சாவான்
எங்க தங்க தலைவி வனிதாக்கு வாக்கு அளிக்காத எல்லாரும் இரத்தம் கக்கி சாவான்
யாரு பார்க்கப்போறாங்க?
#வனிதாவே வெளியே போய்ட்டா இனிமே யாரு
பிக்பாஸ் பார்க்கபோறாங்க ?? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
வனிதாவின் விழுதுகள்
தங்க தலைவி வனிதா வாழ்க.. தலைவி மீண்டு வருவார் என்று நம்பி வாழும் வனிதாவின் விழுதுகள் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
குளிர் காயும் சங்கம்
தங்க தலைவி வனிதா வாழ்க இப்படிக்கு சண்டை போட்டு குளிர் காயும் சங்கம் என கிண்டலடித்துள்ளார் இவர்.


Click it and Unblock the Notifications











