Don't Miss!
- News
அதிமுகவையே மொத்தமாக புரட்டிப்போட்ட தீர்ப்பு.. யார் இந்த நீதிபதி ஜெயச்சந்திரன்?
- Lifestyle
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு இந்த பொருட்களை வைத்து வழிபடுவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தருமாம்...!
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Sports
"சூர்யகுமார் ஒன்றும் அவ்வளவு பெரிய வீரர் இல்லை".. பாக். முன்னாள் வீரர் தாக்கு.. காரணம் பாண்டிங் தான்
- Finance
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரியான புது கேரக்டர்.. இவர்தான் கதையில் ட்விஸ்ட் ஏற்படுத்துவாரா?
சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் அந்த சேனலின் முன்னணி தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார்.
தொடரின் புது வரவாக ராதிகாவின் அண்ணன் கேரக்டர் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
வெளியானது
தளபதி
66
ஃபர்ஸ்ட்லுக்
போஸ்டர்...எங்கேயோ
பார்த்த
மாதிரி
இருக்கே
?

முன்னணி தொடர் பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் ஆஸ்தான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்த தொடரின் டிஆர்பி தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ரசிகர்கள் கொண்டாடும் தொடராக சேனலின் முன்னணி தொடராக இந்தத் தொடர் காணப்படுகிறது. தன்னுடைய முதலிடத்தை இந்தத் தொடரிடம் பாரதி கண்ணம்மா விட்டு கொடுத்துள்ளது.

முதலிடத்தை பிடித்த பாக்கியலட்சுமி
முன்னதாக பாரதி கண்ணம்மா தொடர் சேனலின் முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால் அந்தத் தொடரின் ஒரே மாதிரியாக காட்சி அமைப்புகள், கண்ணம்மா நடிகையின் மாற்றம் உள்ளிட்டவை அந்தத் தொடரை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. இந்த கேப்பில் முதலிடத்தை பிடித்த பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

வெளிப்பட்ட கோபியின் குட்டு
பாக்கியலட்சுமி தொடரில் கோபி, பாக்கியலட்சுமி, ராதிகா மற்றும் இவர்களை சுற்றி மற்ற கேரக்டர்கள் என தொடர்ந்து தொடர் பரபரப்பான காட்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கோபியின் குட்டு வெளிப்படுமா என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ராதிகாவிடம் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

போலீஸ் விசாரணை
அவரை ஏற்க ராதிகா மறுத்துவரும் நிலையில், அவரது கணவர், ராதிகா குறித்து போலீசில் புகார் கொடுத்ததையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனது மகளின் மனநிலை, ராதிகாவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கோபி மற்றும் ராதிகாவின் அம்மாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராதிகாவின் அண்ணன்
இதனிடையே அங்கு புதிதாக ராதிகாவின் அண்ணன் சந்துருவாக புதிய என்ற புதிய கேரக்டர் வந்து அவர்களை திரும்ப வீட்டிற்கு அழைத்து செல்வதாக கதைக்களம் அமைந்துள்ளது. இந்தக் கேரக்டரில் நடிகர் நேத்ரன் களமிறங்கியுள்ளார். இதனிடையே ராதிகாவிற்கு தெரிந்த கோபி குறித்த உண்மையை பாக்கியலட்சுமிக்கு சந்துரு கூறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
இரண்டு குடும்பத்தினருக்கு தன்னுடைய காதல் விவகாரம் தெரியாமல் காய் நகர்த்தி வந்தார் கோபி. தற்போது ராதிகாவிற்கு உண்மை தெரிந்துள்ள நிலையில், அடுத்ததாக பாக்கியலட்சுமி உண்மை தெரியவந்தால் என்ன மாதிரியான விளைவுகள் நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வளர்ந்த மகன்கள்
வளர்ந்த மகன்களின் குறிப்பாக திருமணமான மகனின் தந்தையாக உள்ள கோபி, தனது காதல் நாடகத்தை அரங்கேற்றி வந்த நிலையில், அவரது குட்டு அவரது குடும்பத்திற்கு தெரிந்தால், அவர்களை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதும் தற்போது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.