பாரதி கண்ணம்மா சீரியலில் விரைவில் என்ட்ரி கொடுக்கும் புதிய கண்ணம்மா

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அதிகமானவர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் இந்த சீரியல் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

Recommended Video

BIGG BOSS வீட்டிற்கு WILDCARD ENTRY கொடுக்கும் Bharathi Kannamma Roshini

மலையாளத்தில் கருத்த முத்து என்ற தலைப்பில் ஐந்து சீசன்களாக ஒளிபரப்பான இந்த சீரியல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை இந்த சீரியல் பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா காதல்

பாரதி கண்ணம்மா காதல்

கருப்பாக இருக்கும் பெண்ணிற்கும், டாக்டருக்கு ஏற்படும் காதல், அவரை பிரிக்க வெண்பா சதி செய்கிறார். வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும் பாரதியும், கண்ணம்மாவும் வெண்பாவின் சதி வேலைகளால் பிரிகிறார்கள். கண்ணம்மாவிற்கு பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று கண்ணம்மாவிடமும், ஒரு குழந்தை பாரதியிடமும் வளர்கிறது.

விறுவிறுப்பான சீரியல்

விறுவிறுப்பான சீரியல்

சந்தேகத்தால் கண்ணம்மாவை பிரியும் பாரதி, ஹேமா தன் மகள் என தெரியாமல் பாசத்தை பொழிகிறார். கண்ணம்மாவை விவாகரத்து பெற முயற்சிக்கிறார் பாரதி. இதற்கிடையில் கண்ணம்மா, வெண்பாவை போலீசில் மாட்டி விட்டு, சிறைக்கு அனுப்புகிறார். மிக விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என சென்று கொண்டிருக்கிறது இந்த சீரியல்.

விலகிய ரோஷினி

விலகிய ரோஷினி

இதில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வந்தனர். இந்நிலையில் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் ரோஷினி. சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் செட்டில் அவருக்கு ஃபேர்வெல் பார்ட்டி கொடுத்து, வழியனுப்பி வைக்கப்பட்டது.

மாற்றப்பட்ட கண்ணம்மா

மாற்றப்பட்ட கண்ணம்மா

இந்நிலையில் கண்ணம்மா ரோலில் நடிக்க வினுஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரை வைத்து ப்ரோமோக்கள் தயாராகிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் ஒளிபரப்பப்பட வேண்டிய சில பிளாஷ்பேக் காட்சிகள் வினுஷாவை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மா என்ட்ரி ஆக உள்ளார்.

ஏற்க மறுக்கும் ரசிகர்கள்

ஏற்க மறுக்கும் ரசிகர்கள்

ஆனால் புதிய கண்ணம்மா என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே அவரை ஏற்க மறுத்து, ரோஷினியே சீரியல் முழுவதும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ரோஷினியை மாற்றுவதால் சீரியலின் டிஆர்பி வெகுவாக குறையும் என கூறி வருகிறார்கள்.

விரைவில் புதிய கண்ணம்மா

விரைவில் புதிய கண்ணம்மா

வரும் வாரத்தில் புதிய கண்ணம்மாவாக வினுஷா என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி முடிந்ததும் அவர் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வினுஷா வரும் எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X