Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி!
சென்னை: சைடுவாக்கில் முடியை அள்ளிச் செருகிய கொண்டை... கெண்டைக்கால் கொஞ்சம் தெரிய பாவாடை அல்லது புடவை, கழுத்தில் மலை வாழ் மக்கள் போடுவது போன்ற அணிகலன்கள்... முகவாய்க் கட்டையில் ஃ மாதிரி மூணு புள்ளி.
கன்னத்தில் பொட்டு, நெத்தியில் பெரிய பொட்டு என்று இந்த வித்தியாசமான கெட்டப்பில் தொலைக்காட்சி சீரியல்களின் இடையில் கொண்டு வந்து பெருகுவது போல பெண்களை இறக்கி நடிக்க வைக்கறாங்க.
சன் டிவியின் அழகு சீரியல், சந்திரலேகா சீரியலில் இதுதான் டிரண்ட். காலம் மாறிப் போச்சு.. மலை வாழ் மக்களா என்று சொல்ல முடியாத படி டிசைன்களில் நெட்டில் ஆர்டர் செய்து அவர்கள் உடைகள் உடுத்தி வரும் காலம் இது. இந்த சீரியல்கள், நம்மை இன்னும் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
விஜய் டிவியின் அரண்மனை கிளி
இப்போது இதை டிரண்டாக கொண்டு வந்தது விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல்தான். அந்த சீரியலில் ஜானுவும், அர்ஜுனும் எதுக்கோ வனப்பகுதிக்குப் போறாங்க. அங்கே காட்டுவாசிகளிடம் மாட்டிக்கறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு நடத்தி வைக்கறோம்னு ரெண்டு பேர் கெட்டப்பையும் வனப்பகுதி மக்கள் மாத்திடறாங்க. தலைக்கு பூ வளையம், புடவை கட்டு மாற்றம், கழுத்தில் பல விதமான மணிகள் என்று கெட்டப்பை மாற்றி டான்சும் ஆட செய்கிறார்கள்.
சந்திரலேகா சீரியல்
சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலில் அத்திப்பூக்கள், வம்சம் சீரியலில் நடித்த சந்தியா கிராமத்துப் பெண் என்று புதிதாக சந்திரலேகா சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு இருக்கார். இவர் கெட்டப் கூட கணுக்கால் தெரியும்படி ஒரு பாவாடை தாவணி, இரட்டை ஜடை, தாவாவில் மூன்று புள்ளிகள் பொட்டு, கன்னத்தில் பொட்டு, கண்ணில் அப்பிய மை என்று இருக்கிறது. கிராமத்துப் பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்.
அழகு சீரியல்
சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலில் அத்திப்பூக்கள், வம்சம் சீரியலில் நடித்த சந்தியா கிராமத்துப் பெண் என்று புதிதாக சந்திரலேகா சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு இருக்கார். இவர் கெட்டப் கூட கணுக்கால் தெரியும்படி ஒரு பாவாடை தாவணி, இரட்டை ஜடை, தாவாவில் மூன்று புள்ளிகள் பொட்டு, கன்னத்தில் பொட்டு, கண்ணில் அப்பிய மை என்று இருக்கிறது. கிராமத்துப் பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்.
டிவிஸ்ட் கேரக்டரிலா கெட்டப்பிலா?
டிவிஸ்ட் வைக்கறோம்னு இந்த மாதிரி கெட்டப்பில் நடிகைகளை இறக்கி விடறாங்களே டிவிஸ்ட் கெட்டப்பிலா இருக்கிறது? இல்லை பார்த்து ரசிக்க இது போல கெட்டப்பில் நடிகைகளை இறக்குகிறார்களா என்றும் தெரியவில்லை. சீரியல் எடுப்பவர்களுக்கு எதையோ செய்து ஒரு எபிசோடை ஒப்பேத்த வேண்டும் என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது போலும்.