என்னது பாக்கியாவும் கோபியும் மீண்டும் சேரப் போறாங்களா.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கு!

சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் பரபரப்பான பல எபிசோட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இதையடுத்து டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கும் இந்தத் தொடர் ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறது.

அடுத்தடுத்த பல ட்விஸ்ட்களை கொடுத்துவரும் இந்தத் தொடரில் தற்போது கோபிக்கு பாக்கியா விவாகரத்து கொடுத்துள்ளார்.

 விஜய் டிவி தொடர்

விஜய் டிவி தொடர்

விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் மற்றும் சீரியர்களை ரசிகர்களை தொடர்ந்து பரபரப்பாகவே வைத்துள்ளது. இதையடுத்து இந்த சேனலின் ரசிகர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். பரபரப்பான கதைக்களங்களுடன் பல சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

 சிறப்பான தொடர்கள்

சிறப்பான தொடர்கள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேனலின் நிகழ்ச்சிகள் அதிகமாக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. வார நாட்களிலும் நிகழ்ச்சிகள் இருந்தாலும் வார நாட்களில் அதிகமாக ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த சேனலின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

இந்தத் தொடரில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா என மூவரை சுற்றியே கதைக்களம் இருந்தாலும் கோபியின் குடும்பத்தினரின் சென்டிமெண்ட் காட்சிகள் இந்தத் தொடரில் அதிகமாக காணப்படுகிறது. இந்தத் தொடரில் தன்னுடைய திருமணத்திற்கு முந்தைய காதலை தொடரும் கோபி அதை மறைக்க பல தகிடுதத்தங்களை அரங்கேற்றி வந்தார்.

காதலி -மனைவியிடம் மாட்டிய கோபி

காதலி -மனைவியிடம் மாட்டிய கோபி

ஒரு கட்டத்தில் இவர் எப்போது மாட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் துவங்கிய நிலையில், ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து, அவரை முதலில் ராதிகாவிடமும் பின்பு பாக்கியாவிடமும் மாட்டும் சூழலை ஏற்படுத்தினார் இயக்குநர். இதையடுத்து கதைக்களம் சூடு பிடித்தது.

அதிரடி முடிவுகள்

அதிரடி முடிவுகள்

அவரைவிட்டு மும்பை செல்ல ராதிகா முடிவெடுத்த நிலையில், பாக்கியா அவர் கேட்ட விவகாரத்தையே கொடுத்துவிட்டார். இதையடுத்து பரபரப்பான பல எபிசோட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. தொடர்ந்து பாக்கியா கடந்த சில தினங்களாக அதிரடியாக பல விஷயங்களை செய்து வருகிறார்.

பிடி கொடுக்காத பாக்கியா

பிடி கொடுக்காத பாக்கியா

விவாகரத்து கொடுத்த கையோடு தன்னுடைய வீட்டிற்கு செல்லும் பாக்கியா, தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அப்போது அவரை அங்கேயே இருக்க வைக்க அவரது குடும்பத்தினர், மருமகள் ஜெனி, மகள் இனியா ஆகியோர் அவரிடம் கெஞ்சுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் பிடி கொடுக்காமல் பேசுகிறார் பாக்கியா.

பாக்கியா -கோபியின் புகைப்படம்

பாக்கியா -கோபியின் புகைப்படம்

இதையடுத்து சீரியலில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாக்கியா மற்றும் கோபி இருவரும் இணைந்து பட்டுப்புடவை மற்றும் வேட்டியில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளனரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில் இந்தப் புகைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாக்கியா -கோபி இருவரும் விளம்பரம் ஒன்றிற்காக நடித்தபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியா உறுதி

பாக்கியா உறுதி

கோபியுடன் எந்த காரணத்திற்காகவும் மீண்டும் இணையப் போவதில்லை என்பதில் பாக்கியா மிகுந்த உறுதியாக உள்ளார். அவரது இந்த முடிவுக்கு குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். மகன் எழில் மட்டும் பாக்கியாவிற்கு உறுதுணையாக இருக்கிறார். இதனால் அவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X