எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன்.. இனி எந்த நடிகரும் அந்த கேரக்டரில் இல்லை?.. இயக்குநர் வைத்த ட்விஸ்ட்

சென்னை: Ethirneechal Adhigunasekaran (எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன்) எதிர்நீச்சல் சீரியலின் புதிய ப்ரோமோவை பார்த்த ரசிகர்களுக்கு ஆதிகுணசேகரன் கேரக்டர் குறித்து பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நெடுந்தொடர் மூலம் இயக்குநராக பிரபலமானவர் திருச்செல்வன். அதனையடுத்து பிற நெடுந்தொடர்களையும் இயக்கி வந்த அவர் தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கிவருகிறார். தமிழ்நாட்டின் தற்போதைய சென்சேஷன் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல்தான். ஏனெனில் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை பார்க்கிறார்கள்.

new promo of the Ethirneechal serial have many questions about Adhigunasekaran character

ஆதிகுணசேகரன்:அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அந்த சீரியலில் வரும் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம். ஆணாதிக்க சிந்தனையுடன் படித்த பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பது போன்ற அந்த கேரக்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதில் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நடித்திருந்தார்.

அதகளம் செய்த மாரிமுத்து: சினிமாவில் மாரிமுத்து எவ்வளவு பிரபலம் ஆனாரோ அதே அளவு பிரபல்யத்தை எதிர்நீச்சல் சீரியலும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் சமூக வலைதளங்களில் சென்சேஷன் டாபிக்காகவே மாறியிருந்தார் அவர். நக்கலான பேச்சு, அசால்ட்டான உடல்மொழி, தொண்டையை செருமுவது, அவர் கொடுக்கும் டைமிங் கவுண்ட்டர்கள் என அத்தனையும் கொண்டாடப்பட்டது.

உயிரிழப்பு: நிலைமை இப்படி இருக்க கடந்த 8ஆம் தேதி வளசரவாக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை அசௌகரியம் செய்ய தானே காரை ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.

அடுத்தது யார்: மாரிமுத்து உயிரிழந்ததை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி முதலில் வேலராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரோ சினிமாவில் பிஸியாக இருப்பதால் ஒத்துக்கொள்ளாமல் இழுத்தடித்துவந்தார். இதனையடுத்து நடிகர் பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

யாருமே இல்லையா?: இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் எதிர்நீச்சல் நெடுந்தொடருக்கான ப்ரோமோ ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதாவது அந்த ப்ரோமோவில் ஆதிகுணசேகரன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிடுவது போன்று காட்சிகள் இருக்கின்றன. இதனால் இனி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை வைக்காமலே நகர்த்திவிட இயக்குநர் திட்டமிட்டுவிட்டாரோ என கருதப்படுகிறது.

இதற்கிடையே வேல ராமமூர்த்தி ஓவர் ஆட்டிட்யூட் காட்டியதாலும், மாரிமுத்து நடித்து ஸ்கோர் செய்துவிட்ட அந்த கதாபாத்திரத்தில் மற்றொருவர் நடித்தால் செட் ஆகுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்ததாலும்தான் இப்படி ஒரு முடிவை திருச்செல்வம் இப்படி முடிவெடுக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அந்தக் கதாபாத்திரம் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் என்பதால் வேறு யாரேனும் நடிக்க ஒத்துக்கொள்ளும்வரை சீரியலை ஆதிகுணசேகரன் இல்லாமல்கூட இயக்குநர் நகர்த்தலாம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X