குடும்பப் பிணைப்பை சொல்லும் பச்சைக்கிளி தொடர்.. இன்னும் 3 நாள்ல துவக்கம்.. எந்த சேனல்ல தெரியுமா?

சென்னை : வரும் ஜூலை 4ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சியில் தனது ஒளிபரப்பை துவங்கவுள்ளது பச்சைக்கிளி.

Recommended Video

Pachaikili | குடும்பப் பிணைப்பை சொல்லும் தொடர், இன்னும் 3 நாள்ல துவக்கம்

தனது உறவுகளை சிறப்பாக பராமரிக்கவும் திருமண வாழ்க்கையை தொடரவும் ஒரு பெண் சவாலான சூழ்நிலைகளை கடப்பதை கதைக்களமாக இந்தத் தொடர் கொண்டுள்ளது.

இந்தத் தொடர் ரசிகர்களை நிச்சயமாக தன்வசப் படுத்தும் என்று இதன் இயக்குநர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

 சீரியல்களில் கவனம்

சீரியல்களில் கவனம்

சன் டிவி, விஜய் டிவி என தொடர்ந்து அனைத்து சேனல்களும் சீரியல்களில் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. ரசிகர்களும் சிறப்பான தொடர்களுக்கு தங்களது ஆதரவை கொடுக்க தவறுவதில்லை.

 களத்தில் குதித்த கலர்ஸ் தமிழ்

களத்தில் குதித்த கலர்ஸ் தமிழ்

இந்த வரிசையில் சன் டிவி, விஜய் டிவியை தொடர்ந்து கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற சேனல்களும் அடுத்தடுத்த தொடர்களால் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் வரும் ஜூன் 4ம் தேதி முதல் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. தொடரில் நாயகியாக மோனிஷா அர்ஷக் நடித்து வருகிறார்.

 சவாலான சூழ்நிலைகள்

சவாலான சூழ்நிலைகள்

தனது உறவுகளை பராமரிக்கவும் திருமண வாழ்க்கையை தொடரவும் அதிக சவாலான சூழ்நிலைகளை தனது மனவுறுதியால் வெற்றி காண்கின்ற ஒரு பெண்ணின் கதை இது என தொடரின் இயக்குநர் ஜவஹர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 உறுதியான மனநிலை

உறுதியான மனநிலை

கடும் தடைகள், சிரமங்கள் வந்தாலும் தன்னுடைய உறுதியான மனநிலையிலிருந்து மாறாமல் தளராமல் இருக்கும் பச்சைக்கிளி கேரக்டரில் மோனிஷா அர்ஷக் நடித்துள்ளார். இந்தக் கேரக்டர் மூலம் ஒவ்வொரு பெண்ணையும் பச்சைக்கிளி பிரதிபலிப்பதாக மோனிஷா அர்ஷக் தெரிவித்துள்ளார்.

 ஜூலை 4 முதல் ஒளிபரப்பு

ஜூலை 4 முதல் ஒளிபரப்பு

வரும் ஜூலை 4ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இந்தத் தொடர் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக இந்த சீரியலின் குழுவினர் தெரிவித்துள்ளார். பச்சைக்கிளி என்ற கிராமப்பெண் கதாபாத்திரத்தில் மோனிஷா அர்ஷக்கும் ஆதித்யா என்ற இளைஞனாக தீபக்கும் சீரியலில் இணைந்துள்ளனர்.

 அண்ணனாக ஸ்டாலின் முத்து

அண்ணனாக ஸ்டாலின் முத்து

மேலும் பச்சைக்கிளியின் அண்ணனாக ஸ்டாலின் முத்து இணைந்துள்ளார். இவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி கேரக்டரில் நடித்து வரும் நிலையில், இந்தத் தொடரால், பாண்டியன் ஸ்டோர்சிலிருந்து விலகுகிறாரா என்ற கேள்வி முன்னதாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 கதிர் -முல்லை திரும்புவார்களா?

கதிர் -முல்லை திரும்புவார்களா?


ஆனால் அவர் இரண்டு தொடர்களிலும் நடிப்பார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தன்னுடைய தம்பி வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சென்றதால் மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காட்சிகள் காணப்படுகின்றன. விரைவில் கதிர் -முல்லை வீட்டிற்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X