பாலிமர் டிவியில் “சாமி போட்ட முடிச்சு” புது சீரியல்

By Mayura Akilan

பாலிமர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய மெகா தொடர் "சாமி போட்ட முடிச்சு" திங்கள்முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். திருமணம் பற்றியும், திருமணம் நடைபெற எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதைப் பற்றியும் விளக்கும் சீரியல் 'சாமி போட்ட முடிச்சு'

பெண்குழந்தைகளின் தந்தை

பெண்குழந்தைகளின் தந்தை

ஒரு நேர்மையான ஆர்.டி.ஓ அதிகாரியான அப்பா, அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் பிள்ளையும் இருக்கின்றனர்.

அக்காவா? தங்கையா?

அக்காவா? தங்கையா?

மூத்த பெண் பாக்யாவை வரன் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தங்கை பூஜாவைத்தான் பிடிக்கிறது.

மாப்பிள்ளை வீட்டார்

மாப்பிள்ளை வீட்டார்

உடனே மாப்பிள்ளை வீட்டார் அக்கா பாக்யாவை விட்டு விட்டு தங்கை பூஜா வை பெண்கேட்கிறார்கள். மனம் உடையும் அக்கா பாக்யாவை தந்தை தேற்றுகிறார். மாப்பிள்ளை வீட்டாரை வீட்டை விட்டு விரட்டுகிறார்.

மாப்பிள்ளை கடத்தல்

மாப்பிள்ளை கடத்தல்

மகன் ராஜா பணத்திற்காக மாப்பிள்ளைகளைக் கடத்தி சம்பிரதாயங்களை மாற்றி மணமுடித்து வைக்கும் தொழிலைச் செய்கிறான். இந்த விஷயம் அக்கா பாக்யா மூலம் தந்தைக்குத் தெரியவருகிறது. அவனை அடித்து கண்டிக்கிறார் .

சாமி போட்ட முடிச்சு

சாமி போட்ட முடிச்சு

சம்பிரதாயங்களை மாற்றி வித்தியாசமான கலாச்சாரத்தில் மாப்பிள்ளைகளைக் கடத்தி நடத்தப்படும் திருமணம் சாமி போட்ட முடிச்சு வரும் வாரம் முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு பாலிமர் டிவியில் காணலாம். இது ஹிந்தி டப்பிங் தொடர்தான் என்றாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலான கதையம்சம் கொண்டது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X