Sivasakthi Thiruvilaiyadal: புதிய ஆன்மிக புராணத் தொடர்.. ரசிகர்களை கவரும் சிவசக்தி திருவிளையாடல்!
சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மற்ற சேனல்களுக்கு டஃப் கொடுக்கும்வகையில் அடுத்தடுத்து சீரியல்கள், நிகழ்ச்சிகள் என களைகட்டி வருகின்றன. தற்போது மீண்டும் ராமாயணம் உள்ளிட்ட புராண கதைகள் அடுத்தடுத்த சேனல்களில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
நம்முடைய இதிகாச கதைகளை அறிந்துக் கொள்ள புதிய தலைமுறையினரும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள பழைய தலைமுறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மீக புராணத் தொடர் இம்மாத துவக்கத்திலிருந்து ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கலர்ஸ் தமிழ் சேனல்: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வித்தியாசமான களங்களோடு ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மற்ற சேனல்களில் இதிகாசத் தொடர்கள் ஒளிபரப்பாகி வருவதற்கிணங்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மிக புராண தொடர் இம்மாத துவக்கத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஆராவாரமாகவும் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் சுவாரஸ்யத்தோடும் இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
பிரம்மாண்ட இதிகாச தொடர்: மிகுந்த பொருட்செலவோடு தயாராகி, சுவாரஸ்யமான திரைக்கதையோடு இந்தத் தொடர், ரசிகர்களின் ஆரவாரமான ஆதரவைப் பெற்று வெற்றிகரமான தொடராக ஒளிப்பாகி வருகிறது. சிவசக்தி திருவிளையாடல் தொடரின் திரைக்கதையில் திகில் திருப்பங்கள் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூட்டியிருக்கிறது. கண்களை ஆச்சர்யத்தில் பளபளப்பாக்கும் செட் அமைப்புகள், நேர்த்தியான கதாப்பாத்திரத் தேர்வுகள், மாயாஜாலம் நிகழ்த்தும் சிஜி வேலைப்பாடுகள் ஆகியவற்றை இந்தத் தொடரில் பார்க்க முடிகிறது. கைலாயத்தையும் வானுலகையும் நேரில் காண்பதுபோல, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்தத் தொடரை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறது.
சிவசக்தி திருவிளையாடல்: சிவன் - ஆதிபராசக்தி இருவரும் இணைந்த ஆனந்த தாண்டவத்தில் அண்டசராசரங்களும், அனைத்து உயிர்களும் உருவாகின்றன. எல்லாவற்றுக்குள்ளும் ஆதி ஊற்றாக சிவன் இருக்கிறார். முன்னொரு காலத்தில் பிரஜாபதி தட்சண் செய்த தவப் பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள். இதனால் சிவன் தனியாகிறார். போதாதற்கு நாராயணின் தீவிரப் பக்தன் பிரஜாபதி தட்சண், சிவனை எதிரியாகப் பார்க்கிறார். ஆனால், தட்சண் மகள் தாட்சாயிணியோ பருவ வயது எட்டியதும் சிவன் மீது காதல் கொள்கிறாள். ஆனால் மயானத்தில் சாம்பல் பூசித் திரியும் அகோரி சிவன், எனக்கு மருமகன் ஆவாதா? என தட்சண் கடுமையாக எதிர்க்கிறார்.
சிவன் -தாட்சாயிணி திருமணம்: இதனால் அவர் சுயம்வரம் ஏற்பாடு செய்ய, அதில் தாட்சாயிணி சிவனை மணமகனாக தேர்ந்தெடுக்கிறார். அவமானத்தில் தவிக்கிறார் தட்சண். இவ்வாறு சிவசக்தி திருவிளையாடல் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்து வருகின்றன. இந்த வார இறுதியில், மூவுலகும் கொண்டாடும் சிவன் - தாட்சாயிணி திருமணம் அரங்கேறுகிறது. பிரம்மன் முன்னின்று திருமணத்தை நடத்திவைக்க, நாராயணன் சாட்சியாகிறார். கோலகலமாக நடந்தேறிய திருமணத்தால் மூவுலகும் மகிழ்ச்சியில் திளைப்பதாக காட்டப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பிரம்மாண்டம்: இதையடுத்து தட்சண் செய்யும் ஒரு யாகத்தால் தாட்சாயிணி மற்றும் சிவன் வாழ்வில் ஆறாத துயரம் நிகழப்போகிறது. இதன் மூலம் பூமியில் சக்திப் பீடங்கள் உருவாகப் போகின்றன. வீரபத்திரர் வழிப்பாடு தோன்றப் போகிறது. பார்வதி தேவியாக அவதரித்து சிவனை நோக்கி தவமிருந்து அவரை மணக்கப்போகிறாள் ஆதிபராசக்தி. இதற்கிடையில் அசுரர் - தேவர் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம், தங்களுக்குக் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்ட கோபத்தில் தேவர்களோடு மோதப்போகிறார்கள் அசுரர்கள். சிவனின் திருவிளையாடல்களான இவை அனைத்தையும் விறுவிறுப்போடும், திடீர் திருப்பங்களோடும் சுவாரஸ்யமாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு சிவசக்தி திருவிளையாடல் தொடரில் காணலாம்


Click it and Unblock the Notifications











