திகிலும் புதிரும் நிறைந்த மந்திர புன்னகை.. பிரபல சேனலில் துவங்கும் புது தொடர்!
சென்னை : கலர்ஸ் தமிழ் புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது திகில் தொடர் ஒன்றை வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யவுள்ளது.
தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான நிகழ்ச்சிகள்
மற்ற சேனலர்களுக்கு இணையாக புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல். இந்த சேனலில் தொடர்கள் மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளும் சிறப்பான வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சேனலில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் புதிய த்ரில்லர் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய த்ரில்லர் தொடர்
மர்மம், பொய்கள், வஞ்சகங்கள் நிறைந்த திகிலூட்டும் இந்த தொடர் மொத்தமாக 150 எபிசோட்களுடன் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கவுள்ளது. தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரின் ப்ரமோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

அசத்தலான ப்ரமோ
காவல் நிலையம் ஒன்றில் காணாமல் போன நபர்களுக்கான அறிவிப்பு பலகை காட்சியோடு ஆரம்பமே அசத்தலாக இந்த ப்ரமோ காட்சியளிக்கிறது. ஒரு பெண் கடத்தப்படுவதையும் இந்த ப்ரமோ சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கதை ரசிகர்களின் இதயத்துடிப்பை கண்டிப்பாக எகிற வைக்கும் என்ற உத்தரவாதத்தை சீரியல் குழு ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

முக்கிய கேரக்டரில் நளினிகாந்த்
சமையல்காரராக நடிகர் நளினிகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் கைகளில் பெரிய அளவிலான கத்தியை வைத்துக் கொண்டு முறைத்து பார்ப்பது கதைக்களான சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. மொத்தத்தில் இந்தத் தொடருக்கான ப்ரமோ ரசிகர்களை ஈர்த்துள்ளது போல தொடரும் கண்டிப்பாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications