Don't Miss!
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Sports
என்ன கொடும சார் இது.. சூர்யகுமாருக்கே தண்ணீர் காட்டிய சாண்ட்னர்.. அதுவும் பவர் ப்ளேவில் - ஆச்சரியம்!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரசிகர்கள் காத்திருப்பு ஓவர்.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பாகுது மந்திர புன்னகை த்ரில் தொடர்!
சென்னை : பிரபல தொலைக்காட்சி சேனலில் மந்திரப் புன்னகை தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
த்ரில் தொடராக 150 எபிசோட்கள் மட்டுமே மந்திரப் புன்னகை தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டலான மந்திர புன்னகை தொடரின் இரண்டாவது ப்ரமோ.. ஆகஸ்ட் 1 முதல் ஒளிபரப்பு!

புத்தம் புதிய தொடர்கள்
ரசிகர்களை அதிகமாக கவரும் வகையில் அனைத்து சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலும் புத்தம் புதிய தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் அதிகமாக ஒளிபரப்பி வருகிறது.

புத்தம்புது த்ரில் தொடர்
இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மேலும் சேனலின் டிஆர்பியை அதிகரிக்கும் நோக்கத்தில் அடுத்தடுத்த சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய த்ரில்லர் தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாக முன்னதாக ப்ரமோக்களை வெளியிட்டது.

ரசிகர்களை கவர்ந்த ப்ரமோக்கள்
அந்த ப்ரமோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்தத் தொடருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். த்ரில்லர் தொடராக வெளியாகவுள்ள இந்தத் தொடர் மொத்தமாக 150 எபிசோட்களை மட்டுமே திட்டமிட்டுள்ளது. மற்ற சீரியல்கள் எல்லாம் 1000 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகிவரும் நிலையில் இந்தத் தொடர் மொத்தமாக 50 எபிசோட்களில் நிறைவடையவுள்ளதும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பு
தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளதால் இந்தத் தொடருக்கு அதிகமான வரவேற்பு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் காயத்ரி, கதிர் மற்றும் குரு விக்ரம் என்ற 3 கேரக்டர்களை சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்ரமாதித்யன்
தன்னுடைய தங்கையை தேடியலையும் ஒரு பெண்ணின் பிரச்சினைகள் மற்றும் அதிலிருந்து வெளியே வர அவர் செய்யும் முயற்சிகள், அதற்கு உறுதுணையாக இருக்கும் போலீஸ் அதிகாரி இவர்களை மையமாக கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளதாக தொடரின் இயக்குநர் விக்ரமாதித்யன் தெரிவித்துள்ளார்.

கதையின் நாயகி மகிழ்ச்சி
இதனிடையே இந்தத் தொடரில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறித்து மெர்சீனா நீனு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய பிரச்சினைகளை போல்டாக எதிர்கொள்ளும் இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிரட்டலான நளினிகாந்த் நடிப்பு
இந்த தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தொடரில் பிரபல நடிகர் நளினிகாந்த் சமையல்காரராக நடித்துள்ளார். அவர் கத்தியை வைத்துக் கொண்டு கோபமான நடிப்பை வெளிப்படுத்தி ப்ரமோவில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் இந்தத் தொடர் ரசிகர்களை சந்திக்கவுள்ளது குறித்து அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.