ஆஹா...அருந்ததி சீரியலில் இந்த பக்தி டிவிஸ்ட் நல்லாருக்கே...அரோகரா...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் குடும்ப சென்டிமென்ட்ஸ்...தீய சக்தி. முருகன் பக்தி என்று களைகட்ட ஆரம்பிச்சு இருக்கு.
இதுவரை கிணற்றுக்குள் கட்டுக்குள் இருந்த தீயசக்தி, இப்போது வெளியில் வந்து, தன்னை கொன்ற சண்முகம் குடும்பத்தை அழித்தே தீருவேன்னு சபதம் போடுது.
அமெரிக்க வாழ் குடிமகளான சுலேகாவை காதலித்து, தமிழ் நாட்டுக்கு வந்து கல்யாணம் செய்துக்கலாம்னு அழைச்சுட்டு வர்றான் சண்முகம்.

தீய சக்தி
கிணற்றில் இருந்து கரும்புகை போல, கரும் மேகம் போல திரண்டு அருந்ததி ஆவி அதாவது தீய சக்தி வெளியில் வர காரணமே சுலேகாதான். சண்முகத்தை விட்டு, கேட்டை திறக்க சொல்லி கட்டை அவிழ்த்து விட சொல்றா.

சுலேகா பேச்சை
சண்முகமும் சுலேகாப் பேச்சை கேட்டு தீய சக்தி வெளியில் வர காரணமாகிடறான்.தீயசக்தி அவனை கிணற்றுக்குள் இழுத்துக்க, சண்முகத்தின் சின்ன வயசு தோழியான தெய்வானை கிணற்றில் விழுந்து சண்முகத்தை காப்பாத்தறா.

அருந்ததி பேய்
குடும்பமே கையில் போட்டு இருக்கும் பாதுகாப்பு ருத்திராட்ச காப்பை சுலேகாவுக்கும் போட்டுவிட, அவளுக்கு அந்த காப்பு பிடிக்கலை. அவள் கழட்டிவிட அவளுக்குள்ள தீயசக்தி புகுந்து குடும்பத்தை ஒரு ஆட்டு ஆட்டி வச்சுடுது.

சுலேகா
இதனால் கோபமான சுலேகா, தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு அமெரிக்காவுக்கு போயிடறா. பாவம்..நல்ல அழகான லட்சணமான பொண்ணு. இனி சீரியலில் வருமோ வராதோ தெரியலை.

அம்மா நம்பூதிரி
முருகன் கோயில் காப்பாளர் ஈஸ்வரி அம்மா வீட்டு குடும்பத்தை தீய சக்தியிலிருந்து காப்பாத்தணும்னா நம்பூதிரி அம்மாகிட்ட போயி குறி கேளுங்கன்னு சொல்றார்.

முருகன் பக்தை
நம்பூதிரி அம்மா சண்முகத்துக்கு முருகன் பக்தையான தெய்வானையை கல்யாணம் பண்ணி வச்சாதான் குடும்பத்தில் அமைதி கிடைக்கும்னு சொல்றாங்க.அவளாலதான உங்க குடும்பத்தை காப்பாத்த முடியும்னும் சொல்றாங்க.

சம்மதிக்கலை
ஈஸ்வரி அம்மா தெய்வானையிடம் கேட்க, தெய்வானை நீங்க எங்க..நான் எங்கம்மா.. இதெல்லாம் சரி வராதுன்னு சொல்லிட்டு போயிடறா. இருந்தாலும் வீட்டுக்கு வந்து முருகன் சிலை முன் முருகா முருகான்னு 6 தடவை சொல்லுவேன்..சண்முகத்தை கல்யாணம் பண்ணிக்கலாம்னா ஏதாவது ஒரு வகையில் வாக்கு குடுன்னு கேட்கறா.

கையில் இறகு
தெய்வானை முருகா முருகா என்று சொல்ல, முருகனிடம் வச்சிருந்த மயிலிறகு பறந்து வந்து தெய்வானையின் கையில் வந்து அடைக்கலம் புகுது. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றா தெய்வானை. சண்முகத்துக்கு சம்மதமா?
பொறுத்திருந்து பார்க்கலாம்...


Click it and Unblock the Notifications











