»   »  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வியப்பூட்டும் விஞ்ஞானம்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வியப்பூட்டும் விஞ்ஞானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வுகள், செய்திகள் அடங்கிய பல தொகுப்புகள் அழகான காட்சிகளோடு 30 நிமிடங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றது.

வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சியில் செக்மண்ட்ஸ்ம் இருக்கின்றன, அதில் "அப்டீன்னா" பகுதியில் நம்மை சுற்றி இருக்கும் அறிவியலை சிறு சிறு சோதனைகள் மூலம் செய்து காட்டுகிறார் கிரிஸ்டி.

news 7 Tamil tv science program on viyapootum vingyanam

அடுத்ததாக "ஹேஷ் டேக் விஞ்ஞானம்" இந்த பகுதியினை பார்க்கவி வழ்ங்கி வருகிறார். சமூகவலைதளங்கள் இப்போதைய காலக்கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே தவிர்க்க முடியாத சமூகவலைதள செய்திகளை குறிப்பாக அறிவியல் சார்ந்த செய்திகள், கமெண்ட்கள் குறித்து சுவாரஸ்யமான வகையில் வழங்கப்படுகிறது.

news 7 Tamil tv science program on viyapootum vingyanam

வாரம் ஒரு விஞ்ஞானி பகுதியில் வாரா வாரம் ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக செய்தி தொகுப்பாக வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியினை மனோஜ் தயாரிக்கிறார். அம்ரூத் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார், அது மட்டுமின்றி க்ரிஸ்டி, பார்க்கவி ஆகியோர் அப்டின்னா மற்றும் ஹேஷ் டேக் விஞ்ஞானம் என்ற பகுதிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து பேசிய தயாரிப்பாளர் மனோஜ், தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒரே நிகழ்ச்சி வியப்பூட்டும் விஞ்ஞானம் தான்.

news 7 Tamil tv science program on viyapootum vingyanam

அந்த வகையில் இந்நிகழ்ச்சியினை தயாரிப்பதில் பெருமையாக உள்ளது. மேலும் பள்ளி கல்லூரியில் படித்ததை விட இந்நிகழ்ச்சிக்காக அதிகம் படிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் நேயர்களுக்கு உண்மையான தகவல்களை நேர்மையோடு எங்களால் அளிக்கவும் முடியும் என்று பெருமிதத்துடன் கூறினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சி சார்ந்த கேள்வி கேட்கப்ப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன என்றார்.

English summary
A science program telecast on News 7 Tamil Television Viyapootum Vingyanam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil