காதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை!

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Recommended Video

4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை- வீடியோ

ஜெய்ப்பூர்: காதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக அவர்கள் இந்த விபரீத முடிவை எடுப்பதாகத் தெரிகிறது.

News anchor dies after falling from fourth floor

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ராதிகா கௌசிக், நேற்று காலை நொய்டாவில் தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா ஜீ சேனலில் தொகுப்பாளினியாக பணி புரிந்து வந்தவர். இவர் மேலும் இரண்டு தோழிகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ராகுல் என்ற சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ராதிகாவுடன் அந்த வீட்டில் இருந்துள்ளார். ராகுலும், ராதிகாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்னர் ராகுலுக்கும், ராதிகாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகுல் கழிவறை சென்றிருந்த நேரத்தில் மாடியில் இருந்து குதித்து ராதிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராதிகாவின் மரணம் விபத்தா, கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X