நான் போல்டான பொண்ணு! : சீரியல் நடிகை நிகிலா

By Mayura Akilan

"வாணி ராணி' தொடரில் அசத்தல் நடிப்பில் ராதிகாவிற்கு நிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார் நிகிலா. தமிழ் சீரியலுக்கு புதுமுகமான நிகிலா பெங்களூர் பெண். பி.எஸ்சி., சைக்காலஜி படித்துள்ளாராம்.

பள்ளி நாட்களில் கற்றுக்கொண்ட மேடை நாடகம் இப்போது சீரியலுக்குக் கை கொடுக்கிறது.

வாணி ராணி தொடரில் பிரபலமான நிகிலா இப்போது கன்னடப் படத்தில் அறிமுகமாகியுள்ளார். நடிகையாக வேண்டும் என்பது கனவாக இருந்தாலும் சைக்காலாஜி படித்து முடித்தள்ளார். இப்போது நடிப்பில்தான் முழு கவனம் செலுத்துகிறார்.

கன்னடம் தெலுங்கில்

கன்னடம் தெலுங்கில்

வாணி ராணி தொடருக்கு முன்பே இரண்டு கன்னட தொடரிலும், ஒரு தெலுங்கு தொடரிலும் நடித்துள்ளாராம். ராதிகா தொடரில் நடிக்கும் வரை ராடான் நிறுவனம் பற்றியோ, ராதிகா பற்றியோ நிகிலாவிற்கு தெரியவே தெரியாதாம்.

தைரியம் சொன்ன ராதிகா

தைரியம் சொன்ன ராதிகா

முதல்நாளில் ராதிகா உடன் நடிக்க நிகிலா பயந்தாராம். இப்போது உண்மையான அம்மாவாகவே மாறிவிட்டாராம் ராதிகா.

அழும் நிகிலா

அழும் நிகிலா

நிகிலா அழுது நடிக்கும் சீனை டிவியில் பார்த்தால் தன்னாலயே அழுகை வந்துவிடுமாம். அழுது கொண்டேதான் பார்ப்பாராம். அந்தளவிற்கு தொடரோடு ஒன்றி போய் விடுவாராம்.

நான் சுதந்திரமானவள்

நான் சுதந்திரமானவள்

சீரியல் வேலை என்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது. ஆனால் இங்கு கடினமா உழைக்கிறார்கள். புதுசா நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். புது புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் நிறைய இருக்கு. சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிறேன்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

வாணி ராணி தொடருக்கு பெங்களுரிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிறைய பெண்கள் கையைப் பிடித்து கொண்டு பேசுவார்கள். அதே போல பஸ்ல போகும் போதும், வரும்போதும் நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு பேசுகிறார்கள் என்கிறார் நிகிலா.

சினிமாவில் வாய்ப்பு

சினிமாவில் வாய்ப்பு

சினிமாவில் நடிக்க அழைப்பு வருகிறது. எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஒரு படம் நடித்தாலும் பெரிய பேனர், பெரிய டைரக்டர், பெரிய ஹீரோன்னு பெரிசா பேசப் படணும்னு நினைக்கிறேன். முதன் முறையாக சீனிவாச கல்யாணம் என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

சினிமா பிடிச்சிருக்கு

சினிமா பிடிச்சிருக்கு

போல்டா, தைரியமா தன்னம்பிக்கையோட இருப்பேன். யாருக்கும் கீழ் பணிந்து இருப்பது பிடிக்காது. இன்றைக்கு சினிமா பிடிச்சிருக்கு செய்றேன். நாளைக்கு சினிமா உலகம் இல்லனாலும் எப்படி வாழனும்னு எனக்கு தெரியும். அதுக்கு என்னை பக்குவ படுத்திக்குவேன் என்கிறார் போல்டான நிகிலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X