Nila Serial: நிலா தாலியை கழற்றி ஆணியில் தொங்கவிட்டதை வெண்மதி பார்த்துட்டா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் நடுவில் கொஞ்சம் போராக இருந்தாலும், இப்போ பரபரப்பா துவங்கி இருக்கு.
நீலாம்பரி தம்பி அசோக்கை கல்யாணம் செய்துக்கிட்டதா, நிலாவும் அசோக்கும் மாலையும் கழுத்துமா காரில் வந்து இறங்கறாங்க.
நீலாம்பரி முதலில் நம்பிட்டாலும், உள்ளுக்குள் சந்தேகம் இருக்கு. இந்த சமயத்துல நிலா கழுத்தில் போட்டு இருந்த தாலியை கழட்டி ஆணியில் மாட்டி தொங்க விடறதை வெண்மதி பார்த்துடறா.

நீலாம்பரி ஸ்ரீதர்
முன்பு தனது பார்ட்னராக இருந்த ஸ்ரீதரின் பொண்ணுதான் நிலான்னு தெரிஞ்சுக்கிட்ட நீலாம்பரி, நிலாவை தன்னோட மருமகளாக்கிக்க துடிக்கறாங்க. ஆனால், நிலாவின் மகன் சஞ்சய் நல்லவன் இல்லை. இதனால் நிலாவுக்கு அவனை பிடிக்கலை. மாற்றாக தன் தம்பி அசோக்குக்கு இரண்டாவது பொண்டாட்டியா வரணும்னு ஆசைப்படறாங்க. எல்லாமே ஸ்ரீதரன் சொத்துக்களை அடையத்தான்.

அசோக் நிலா
தன் மனைவி மன நிலையை சரிசெய்யணும்னு நினைக்கற அசோக் ,அக்கா தன்னை இக்கட்டில் மாட்டி விடுவதிலிருந்து தப்பிக்க நினைக்கறான். இந்த சமயத்துலதான் அப்பா பத்தின குளூ கிடைச்சதுல உற்சாகமான நிலா, அசோக்கிடம் பேசி, ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்லிடலாம்னு முடிவு பண்ணி வர்றாங்க.

எனக்கு நம்பிக்கை
நிலா, நீயும் அசோக்கும் கல்யாணம் செய்துக்கிட்டதா சொல்றீங்க.எனக்கு முழுசா நம்பிக்கை வரலை. அதனால, குருஜி சொன்ன மாதிரி உனக்கு மறுதாலி கட்டற சடங்கு நடந்தாதான் எனக்கு திருப்தியா இருக்கும் நிலான்னு நீலாம்பரி சொல்ல, நிலாவுக்கு கலக்கமா இருக்கு.

ஆணியில் தாலியை
நிலா தன் அண்ணி இருக்கும்போது அசோக் அண்ணனை கல்யாணம்செய்துக்கிட்டு வந்தது அசோக்கின் தங்கை வெண்மதிக்கு பிடிக்கலை. இந்த சமயத்துலதான் எப்போதும் போல தனது கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி நிலா ஆணியில் மாட்டித் தொங்க விடறா. இதை வெண்மதி பார்த்துட்டு அடிப்பாவின்னு சொல்றா.
எப்போ இதை தனது அக்கா நீலாம்பரிகிட்டே சொல்ல போறாளோ..என்ன நடக்க போகுதோ...


Click it and Unblock the Notifications











