Nila serial: ஐ...நிலா நீலாம்பரியை ஏமாத்திட்டா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் மற்றவரை எல்லா விதத்திலும் ஏமாற்றி தில்லாலங்கடி வேலை பார்ப்பவர் நீலாம்பரி. இப்போது நிலா நீலாம்பரியை ஏமாத்தி அவங்களை நம்ப வச்சுட்டா.
ஒரு காரியம், அதுவும் நல்ல காரியம் செய்து முடிக்கணும்னு களத்துல இறங்கியாச்சு.அதை கனக் கச்சிதமா நடத்தி முடிக்கணும்னு முடிவில் இருக்கா நிலா.
அசந்து போயி கதவை திறந்து வச்சுக்கிட்டே தாலியை கழற்றி ஆணியில் மாட்டிட்டா.அதை நீலாம்பரியின் தங்கை வெண்மதி பார்த்துட்டு அக்காகிட்ட சொல்ல போறா.

ஆன்ட்டி வெண்மதிக்கு
நீலாம்பரி நிலா ரூமுக்குள் வந்து பார்க்க, நிலா கழுத்தில் தாலியோட உட்கார்ந்து இருக்கா நீலாம்பரியைப் பார்த்ததும் என்ன ஆன்ட்டி கூப்பிட்டு இருந்தா நானே வந்திருப்பேனேன்னு சொல்றா நிலா. இல்லைம்மா உன் கழுத்துலன்னு நீலாம்பரி இழுக்க... அக்கா நான் பார்த்தேன்..இவ தாலியை கழற்றி ஆனியில மாட்டி இருந்தான்னு வெண்மதி சொல்றா.

என்ன சொல்றீங்க?
அச்சச்சோ வெண்மதி நீங்க என்ன சொல்றீங்க.. நான் தாலியை கழற்றி ஆணியில் மாட்டி வச்சு இருந்தேனா? தூக்கத்தில் கூட தாலி கழுத்துல இருக்கான்னு பார்த்து, தாலிக்கு மதிப்பு குடுத்து வாழற பொண்ணு நான். என்னை போயி இப்படி சொல்றீங்களே வெண்மதின்னு சொல்றா நிலா. ஆன்ட்டி நீங்களும் என்னை நம்பலையான்னு பாவமா நீலாம்பரியைப் பார்த்து கேட்க, இல்லம்மா நான் உன்னை நம்பறேன்னு சொன்ன நீலாம்பரி, வெண்மதி நீ இனிமே நிலா விஷயத்துல தலையிடாதேன்னு சொல்றாங்க.

சாகடிக்க திட்டம்
நிலா இப்போ வேணா நீ அக்காவை ஏமாத்தி இருக்கலாம். ஆனா,இன்னொரு நாள் உன் திருட்டுத்தனத்தை அக்கா கண்டு பிடிப்பாங்க. நீ எதோ திட்டத்தோடத்தான் இங்கே வந்திருக்கே. என் அண்ணியை கொண்டு போய் வைத்தியம்னு எங்கோ சேர்த்திருக்கே. உன் திருட்டுத் தனத்தை கண்டு பிடிக்கறேன் இருன்னு சொல்றா வெண்மதி.

போகப் போகத்தான்
வெண்மதி உங்க மேல நான் நல்ல மதிப்பு வச்சிருந்தேன்.அதை நீங்களே கெடுத்து கிட்டீங்க. ஆனா, ஒரு நாள் உங்களுக்கு புரியும். நான் செய்யறது எல்லாமே அஞ்சலி அக்கா நன்மைக்குத்தான்னு சொல்றா நிலா. சொல்லிட்டு அவ போயிட, வெண்மதி எதுக்கு இங்கே நிக்கறே... நிலா விஷயத்துல தலையிடாதேன்னு சொல்லிட்டேன். எதுக்கு நிக்கறேன்னு கேட்கறாங்க. இப்படி நீலாம்பரியை ஏமாத்திட்டா நிலா


Click it and Unblock the Notifications











