twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Nila serial: சஞ்சய் வச்ச டெஸ்டில் நிலா பாஸ் பாஸ்!

    |

    சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் சஞ்சய் வைத்த டெஸ்ட்டில் நிலா பாஸ் பாஸ்னு பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடையற மாதிரி காரியம் செய்து இருக்கிறாள்.

    நிலாவின் அப்பா ஸ்ரீதர் முன்னொரு காலத்தில் நீலாம்பரியின் பார்ட்னர்ஷிப்பா இருந்திருக்கார். அவரை கல்யாணம் செய்துக்க நீலாம்பரி ஆசைப்படுகையில்தான், தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருப்பதை ஸ்ரீதர் நீலாம்பரிகிட்ட சொல்றார்.

    இதனால், கோபம் அடைந்த நீலாம்பரி கல்யாணம் செய்துக்க மிரட்டியும் ஸ்ரீதர் பணியாததால், அவரை கொன்னுடறாங்க, ஆனால், அவர் ஹைதராபாத்தில் அன்வர் என்கிற பெயரில் இஸ்லாமியரா வாழ்ந்துகிட்டு இருக்கார்.இப்போது சென்னை வந்திருக்கார்.

    நிலாவின் சொத்துக்களை

    நிலாவின் சொத்துக்களை

    ஸ்ரீதர் தன்னுடைய சொத்துக்களை தனது மகள் நிலாவின் பேரில் எழுதி வச்சிருப்பது தெரிந்து, அவளைத் தேடித் பிடிச்சு மகன் சஞ்சய்க்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறாங்க. ஆனால், சஞ்சய் நல்ல பையன் இல்லை என்பதால், நிலாவுக்கு பிடிக்கலை. சஞ்சய் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவை காதலிப்பது போல நடிச்சு கெடுத்துடறான், இப்போ சஞ்சயை கல்யாணம் செய்துக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்வேதா இருக்கா.

    சஞ்சய் முயற்சி

    சஞ்சய் முயற்சி

    நிலா சொல்லாமல் கொள்ளாமல் நீலாம்பரியின் தம்பி அசோக்கை கல்யாணம் செய்துகொண்டு வருவது போல, மாலையும் கழுத்துமாக வந்து நிக்கறாங்க. நீலாம்பரியும் நிலாவை மருமகளா ஏத்துக்கறாங்க. வரவேற்பு வச்சு கல்யாணம் ஆனதை தெரியப்படுத்தணும்னு நினைக்கும் போது, நிலாவின் காதலன் கார்த்திக்குடன் நிலா பேசிக்கொண்டு இருந்தது, அவனை கட்டிக் கொண்டு இருந்தது எல்லாத்தையும் சஞ்சய் வீடியோ எடுத்து, நிலாவுக்கு செக்ஸ் டார்ச்சர் குடுக்கறான்.

    இல்லேன்னா வீடியோ அம்மாகிட்ட

    இல்லேன்னா வீடியோ அம்மாகிட்ட

    நிலா சொன்னபடி இன்னிக்கு ராத்திரி 10 மணிக்கு கெஸ்ட் ஹவுஸ் வந்துரு. ஒரு நாள் பொண்டாட்டியா வாழ்ந்துட்டா அப்புறம் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்றான்.நிலாவும் கெஸ்ட் ஹவுஸ் போறா.சஞ்சய் ஆசையா நெருங்க போனவன்,உன் கழுத்துல என் மாமா கட்டின தாலி இருக்கு. அது எனக்கு உறுத்தலா இருக்கு அதை கழட்டி வச்சுட்டு வான்னு சொல்றான்.

    கனவுல மிதக்கறே

    கனவுல மிதக்கறே

    முட்டாள் சஞ்சய் நீ என்ன இன்னும் கனவுல மிதக்கறியா... என்னடா பண்ணுவே..எங்கே வீடியோவை உன் அம்மாவுக்கு அனுப்புன்னு சொல்றா நிலா. அவனும் போனைத் தேட அவன் போனுக்கு பதில் வேற போன் இருக்கு.சிரிச்சுகிட்டே நிலா சொல்றா, நீ வரும்போது ரவுடிகள் ரெண்டு பேர் சண்டை போட்டங்களே... அது நான் செய்த ஏற்பாடுதான்.உன் மொபைல்தான் காணாம போச்சு...எப்போதும் என்னை நீ ஜெயிக்க முடியாதுடா.. என் தங்கச்சிக்கும் , உனக்கும் கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டு ராஜநடை போட்டு வெளியில வர்றா நிலா.

    கெஸ்ட் ஹவுஸ் போன நிலா பாஸ் பாஸ்தானே!

    English summary
    Sanjay's test on Sun TV's nila Serial has done the same thing to please the fans of the nila n pass.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X