Nila Serial:அட நீலாம்பரி வீட்டில் நிலாவின் ஆட்சி!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி வீட்டுக்கு மருமகளாக போயிருக்கும் நிலாவின் ஆட்சி அனைவரும் பொறாமை படும்படி கொடி கட்டிப் பறக்குது
இந்த நீலாம்பரி சொன்னா அம்மன் சொல்றதை விட மேலன்னு அடிக்கடி ஒரு டயலாக் நீலாம்பரி சொல்லிக்கிட்டு இருப்பாங்க.
நிலா வீட்டுக்கு வந்து நீலாம்பரியின் அதிகாரத்தை கைப்பத்திருவா போல இருக்குன்னு சொல்ற அளவுக்கு அதிரடி வேலைகளைப் பார்க்கிறாள்.

மனைவி அசோக்
அசோக்கின் மனைவி மன நில சரியில்லாமல் இருக்கா. இந்த அசோக்கைத்தான் தான் கல்யாணம் செய்துக்கிட்டதா நீலாம்பரியை நம்ப வைச்சு இருக்கா. மன நிலை சரியில்லாத அசோக்கின் மனைவி அஞ்சலியை வைத்தியத்துக்கு அனுப்பனும்,ரேவதி நீங்க உங்களுக்கும், அஞ்சலி அக்காவுக்கும் தேவையான துணிமணிகளை பேக் பண்ணி வச்சு ரெடியாகுங்கன்னு சொல்றா.இதைக் கேட்ட நீலாம்பரி அதிர்ச்சி ஆகறாங்க.

வெண்மதி அசோக்
நீலாம்பரிக்கும் அசோக்குக்கும் வெண்மதி தங்கை. அண்ணியை எதுக்கு இப்போ வெளியில அனுப்பறேன்னு வெண்மதி கேட்க...வீட்டை விட்டா வெளியில அனுப்பறேன். அவங்களுக்கு வைத்தியம் பார்க்க ஆஸ்பத்திரிக்குத்தானே அனுப்பி வைக்கறேன்னு சொல்றா. எங்கேம்மா இருக்கு அந்த ஆஸ்பத்திரின்னு நீலாம்பரி கேட்க, சென்னைக்கு உள்ளேதான் ஆன்ட்டி இருக்கு. இந்த மாதிரி மனநிலை சரியில்லாதவங்களை உடனே கியூர் பண்ணிடறாங்களாம்னு நிலா சொல்றா

ஏன் நிலா
என்கிட்டே ஏன் நிலாஒரு வார்த்தை சொல்லலைன்னு கேட்கறாங்க நீலாம்பரி. ஆன்ட்டி நேத்து விட்டா இன்னும் ஒரு வருஷத்துக்கு அங்கே இடம் கிடைக்காதாம் ஆன்ட்டி. அதான் உடனே புக் பண்ணிட்டேன்னு நிலா சொல்றா. இதெல்லாம் நொண்டிச் சாக்கு அக்கா... உன்கிட்டே பர்மிஷன் வாங்கணும்னு கூட தெரியாதா? அண்ணியை விட்டுட்டு அசோக் ஒரு நாள் கூட இருக்கமாட்டார்னு தெரியாதா உனக்குன்னு வெண்மதி மேலும் சத்தம் போடறா.

அசோக் வெண்மதி
வைத்தியம் பார்க்கத்தானே அனுப்பி வைக்கறா விடு வெண்மதின்னு சொல்றான் அசோக். அண்ணியிருந்தா இவங்க ஜாலியா இருக்க முடியாதுன்னு இப்படி நிலா பிளான் போடறா அக்கான்னு வெண்மதி சொல்ல, விடு வெண்மதி..அசோக்கே சம்மதிச்சுட்டான் உனக்கு பிடிக்கலேன்னா உன் ரூமுக்கு போன்னு சொல்றாங்க நீலாம்பரி. ஆன்ட்டி, இந்த வீட்டு வம்சம் தழைக்க மருமகளா இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். இப்படி ஒருத்தரை வச்சுக்கிட்டு எப்படி நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க முடியும்னு சொல்ல, நிலாவை நீலாம்பரி ஆச்சரியமா பார்க்கறாங்க.


Click it and Unblock the Notifications











