ஐ...நிலாவின் அப்பா இன்னிக்கு ரம்ஜான் கொண்டாடறார்...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் நிலாவின் அப்பா ஹைதராபாத்தில் குடும்பத்தோட ரம்ஜான் கொண்டாடறார்.
நிலாவின் அப்பாவுக்கு ஹைதராபாத்தில் ஏது குடும்பம்.. அந்த குடும்பத்திலும் ஒரு பாட்டி ,பேத்தி அதாவது நிலாவின் அப்பாவை வாப்பா என்று கூப்பிடும் பேத்தியும் மட்டும் இருக்காங்களே...
எப்படி இவருக்கு இந்த குடும்பம் அமைஞ்சது... உண்மையில் நிலாவின் அப்பா ஸ்ரீதர்தானே இதுன்னு பல கேள்விகள் வருது..

விருந்துக்கு நிலாவும் அசோக்கும்
நிலாவின் வளர்ப்பு அப்பா வீட்டுக்கு, அதாவது நிலாவின் தாய் மாமா வீட்டுக்கு நிலா நீலாம்பரியின் தம்பி அசோக்குடன் விருந்துக்கு வந்திருக்கா.கூடவே நீலாம்பரியும் வந்திருக்காங்க. வீரபத்திரன் ஹைதராபாத்தில் இருந்து போன் செய்றான்.

நிலா கார்த்திக் திடீர்னு
நிலா கார்த்திக் ரெண்டு பேரையும் திடீர்னு காணோம் மேடம். எப்படி இருந்தாலும் கண்டு பிடிச்சுருவேன் மேடம்னு வீர்பத்ரன் சொல்ல... என்ன வீரபத்ரா... சென்னையில் இருக்கற அவங்களை எப்படி ஹைதராபாத்ல கண்டுபிடிப்பேன்னு கேட்கறாங்க.

அசோக்கை நிலா
அசோக்கை நிலா கல்யாணம் செய்துகிட்டு வந்து நிக்கறா.எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம்னாலும், இது எப்படி நடந்துச்சுன்னு தெரியணும்.,அதை நீதான் கண்டு பிடிக்கணும் வீரபத்ரான்னு சொல்றாங்க.

ரம்ஜான் கொண்டாட்டத்தில்
இங்கே நிலாவின் அப்பா ரம்ஜான் கொண்டாடி வர்றார். ஏழைகளுக்கு உணவளித்து ,பாட்டி, பொண்ணுக்கு புது உடைகள் வாங்கிக் குடுத்து ரம்ஜான் கொண்டாடறார். அப்போ பேத்தியிடம் வந்து ஒருத்தன் ரம்ஜான் பரிசு,புகழ்பெற்ற கடையின் பிரியாணின்னு பரிசு குடுக்க அதைத் தட்டி விடறா அந்த பொண்ணு.

நான் படிச்சது தப்பு
என்னம்மா நீ..பிடிக்கலைன்னா வேணாம்னு சொல்லிடலாம்ல..அதைத் தூக்கிப்போட்டுட்டு அவனை ஏன் அடிச்சே..இதை வஞ்சம் வச்சுக்கிட்டு அவன் எதாவது உன்னை செய்தா என்ன பண்றது... இந்த காலத்து பொண்ணுங்களுக்கு படிச்சாலும் மூளை வேலை செய்ய மாட்டேங்குதுன்னு சொல்றார்.
தப்புதான் வாப்பா... என்னை இவ்வளவு செலவு செய்து நீங்க படிக்க வச்சது தப்புதான் வாப்பான்னு சொல்லிட்டு கோச்சுக்கிட்டு போறா அந்த பொண்ணு. சமாதானப்படுத்த பின்னால் போகிறார் வாப்பா.


Click it and Unblock the Notifications











