Nila serial: பகீர் காட்சி இப்படி சப்புன்னு ஆகிப் போச்சே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி அன்வர் சந்திப்பு பகீர்னு காட்சிகள் இருக்க, கடைசியில் அன்வரின் ரியாக்ஷனால் காட்சி சப்பென்று ஆகிவிட்டது.
நிலாவின் அப்பா ஸ்ரீதர், இவர்தான் இப்போது அன்வராக நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், இவருக்கு பழக்கமான பவானி இப்போது நீலாம்பரியா நடிக்கறாங்க.
நிலாவின் அப்பா ஸ்ரீதரை கல்யாணம் செய்துக்க நீலாம்பரி ஆசைப்பட, அவர் தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையும் இருக்கிறது என்று சொல்கிறார்.அதனால், பவானியாக இருக்கும்போது நீலாம்பரி ஸ்ரீதரை கொலை செய்துடறாங்க.

நீலாம்பரி வீரபத்ரன்
ஸ்ரீதர் அன்வர் என்கிற வேஷத்தில் ஹைதராபாத்தில் உயிரோடு இருக்கிறார் என்பதையும், நிலா தனக்குத் தானே தாலி கட்டிகிட்டான்னும் போட்டோ எடுத்து ஆதாரத்துடன் நீலாம்பரியிடம் சொல்லதான் வீரபத்திரன் அவங்களுக்கு போன் செய்யறான்.அப்போதுதான் அவனுக்கு கார் மோதி விபத்தாகிடுது. அவனுக்கும் நினைவின்றி போயி, இப்போது கோமா நிலையில் இருக்கான்.

அன்வர் வீரபத்திரன்
தம்பி அசோக்கின் மனைவி அஞ்சலிக்கு அன்வர் வைத்தியம் பார்த்து, அவள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிட்டு வருவதாக கேள்விப்பட்ட நீலாம்பரி, ஆஸ்ரமத்துக்கு போன் செய்து அன்வரை ஆஸ்பிடலுக்கு அழைச்சுக்கிட்டு வர சொல்றாங்க. அவர் வருவதைப் பார்த்த நீலாம்பரிக்கு வியர்த்து விறுவிறுத்து போகிறது.அ வர் ஸ்ரீதராக நடந்து வந்து தனது கழுத்தை நெறிப்பது போல எண்ணம் வந்து கத்திடறாங்க.

இப்படி எதுக்கும்மா
அன்வரை அழைத்து வந்த ஆஸ்ரம உரிமையாளர், எதுக்கும்மா இப்படி கத்தறீங்க.. ஏதாவது பிரச்சனையான்னு கேட்கறார்.இல்லை இது வேற ஒரு நினைப்பு.சரி, இவர் பெயரா அன்வர்.இவரை நான் எங்கியோ பார்த்து இருக்கேனேன்னு அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்கறாங்க. இல்லை நீங்க எங்கேயும் பார்த்து இருக்க முடியாதும்மா... இவரை நான் இங்கே வைத்தியம் பார்க்கத்தான் கூப்பிட்டேன்னு சொல்றார்.

நீலாம்பரி நம்பலை
இதை நம்பாத நீலாம்பரி ,வீரபத்ரனை உங்களுக்கு தெரியுமான்னு அவனை காமிச்சு கேட்கறாங்க. இல்லைங்க தெரியாதுன்னு சொன்ன,அன்வர் இவருக்கு என்னன்னு கேட்கறார்.ஒரு ஆக்சிடென்ட்ல கோமா ஸ்டேஜுக்கு போயிட்டார். இவரை சரி பண்ண முடியுமான்னு கேட்கறாங்க. தெரியலை.. இருங்க பார்த்து சொல்றேன்னு அவர் நாடி பிடித்து பார்க்க நீலாம்பரி சுவாமிஜிக்கு போன் செய்து, தனது சந்தேகத்தை பகிர்ந்துக்கறாங்க. அதாவது, ஸ்ரீதர் உயிரோடத்தான் இருக்கான்னு.


Click it and Unblock the Notifications











