Nila serial: இதுதான் முதல் தடவைன்னு நான் எப்படி நம்பறது?

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவின் தங்கை ஸ்வேதாவுக்கு வாழ்க்கை பிச்சை கேட்டு நீலாம்பரியிடம் நிக்கறாங்க நிலாவின் அம்மா.

என் பையன் சஞ்சய் ஸ்வேதாவை நான் காதலிக்கலைன்னு சொன்னான். நட்பாத்தான் பழகினதா சொன்னான்.

அதனாலதான்..நீங்க நிலா ரிஷப்ஷன்ல ஸ்வேதா, சஞ்சய் கல்யாணம் பத்தி அறிவிக்க சொன்னதும் நான் அறிவிக்கலைன்னு நீலாம்பரி சொல்றாங்க.

ஸ்வேதா சஞ்சய்

ஸ்வேதா சஞ்சய்

நீலாம்பரி முதலில் தனது மகன் சஞ்சய்க்குத்தான் நிலாவை பொண்ணு கேட்டு இருந்தாங்க.சஞ்சய் ஒரு நாள் பப்புக்கு அழைச்சுட்டு போக, அன்றிலிருந்து சஞ்சயை வெறுத்துடறா நிலா.நிலா அப்பாவும் சஞ்சயை வெறுத்துடறார். ஆனால், ஸ்வேதா மட்டும் சஞ்சயை காதலிச்சுட்டு இருக்கா.ஒரு நாள் ஸ்வேதாவை அடைய கெஸ்ட் ஹவுஸுக்கு அழைச்சுட்டு போனதை தெரிஞ்சு நிலாவும், சந்திராவும் ஸ்வேதாவை காப்பாத்தறாங்க .கூல் ட்ரிங்க்கில் மயக்க மருந்தை குடுத்து அடைய நினைக்கிறான் சஞ்சய்

அவனுக்குத்தான் நான்

அவனுக்குத்தான் நான்

என்ன ஸ்வேதா புரியாம பேசறே...உனக்கு கூலிட்ரிங்க்ல மயக்க மருந்து குடுத்து உன்னை அடைய நினைச்சு இருக்காண்டின்னு சொல்லியும், அவனுக்கு என் மேல எல்லா உரிமையும் இருக்கு. உங்களை யாரு இங்கே வர சொன்னது. சாரி சஞ்சய் ரெண்டு லூசுங்களும் வந்து நம்ம சந்தோஷத்தை கெடுத்துருச்சுங்கன்னு சொல்றா ஸ்வேதா.

ஹொட்டல் ரூமில்

ஹொட்டல் ரூமில்

இன்னொரு நாள் ஹோட்டல் ரூமில் தெரிந்தே சஞ்சயும், ஸ்வேதாவும் ஒண்ணு சேர்ந்துடறாங்க. இதை நிலா ரிசப்ஷன் அன்னிக்கு இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில், ஸ்வேதாவின் அம்மா இதைக் கேட்டுடறாங்க. சஞ்சய் ஸ்வேதா புராஜெக்ட் முடிஞ்சுருச்சுன்னு விட்டுடறான். இவங்கதான் சஞ்சு கூட கல்யாணம் நடக்கும்னு கனவு கண்டுக்கிட்டு இருக்காங்க.

நீலாம்பரியை அழைத்து

நீலாம்பரியை அழைத்து

தனியாக நீலாம்பரியை வரவழைச்சு, நிலா அம்மா விஷயத்தை சொல்ல அதிர்ச்சியான நீலாம்பரி, இதென்ன அசிங்கம் ...அவன்தான் பையன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் ,அவனை விட்டு விலகறதை விட்டுட்டு, கெட்டவன்னு தெரிஞ்சும் பணத்துக்காக ஸ்வேதா அவனையே சுத்திகிட்டு இருந்திருக்கா. அவன்தான் இப்படிப்பட்டவன்னு தெரிஞ்சு நிலா ஒதுங்கிக்கிட்டா. இவளும் அப்படி ஒதுங்க வேண்டியதுதானேன்னு நீலாம்பரி கேட்கறாங்க.

எப்படி நல்லவ

எப்படி நல்லவ

கார்த்திக்கை காதலிச்சுட்டு, அவனோட ஹைதராபாத்தில் மூனு நாள் தங்கிட்டு வந்திருக்கா நிலா. அப்போ நிலா மட்டும் ஒழுக்கமானவன்னு எப்படி நம்பறீங்க சம்பந்தின்னு நிலா அம்மா சொல்ல, யாரை யாரோட சம்பந்தப்படுத்தி பேசறீங்க.நெருப்பு கூட சாக்கடையை சம்பந்தப்படுத்தறீங்க. உங்க நாத்தனார் பொண்ணை பத்தி நீங்களே இப்படி பேசறீங்களே வெட்கமா இல்லை. எனக்கு சஞ்சயை ரொம்ப பிடிக்கும், அதனால் என்னையே அவனுக்கு குடுத்தேன்னு சொல்றா உங்கப்பொண்ணு. இப்படி எத்தனை பேரை பிடிக்கும்னு இவளையே கொடுத்தாளோ...சஞ்சய்தான் முதல் என்பதை நான் எப்படி நம்பறதுன்னு கேட்கறாங்க நீலாம்பரி..

சரியான கேள்விதானே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X