நிலனின் க்யூட் முகத்தால் விஜிக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா ஓட்டுகள்!

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் வாக்கு நிலவரப்படி மூன்றாம் இடத்தில் இருப்பவர் விஜி.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜிக்கு மகன் மூலமும் வாக்குகள் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

வைல்ட் கார்டு மூலம் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் விஜி. சென்னை 28 உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களிலும், நாயகி சீரியலில் நடித்த இவர், இயக்குநர் அகத்தியனின் மகள் ஆவார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலாய் தன்னுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் மக்களிடம் நல் மதிப்பைப் பெற்றிருக்கிறார். டாஸ்க்குகளில் அவரது அணுகுமுறை பாராட்டப்பட்டது.

மகன் நிலன்:

மகன் நிலன்:

பண்டிகை பட இயக்குநர் பெரோஸை மணந்த விஜிக்கு நிலன் என்ற ஒரு வயது மகன் இருக்கிறான். மகனைப் பிரிந்திருக்கும் விஜி, பிக் பாஸ் வீட்டில் உள்ள பிளாப்பி தலையணையைக் கட்டிப் பிடித்து தூங்குவதாக கூறியது, அவர் தன் மகன் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.

டிவிட்டர் பதிவு:

இந்நிலையில், விஜிக்கு நேற்று திருமண நாள். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு திருமணநாள் வாழ்த்துக்களைக் கூறினர். மனைவியைப் பிரிந்து மகனுடன் தனியே வாழ்ந்து வரும் பெரோஸும் தனது டிவிட்டர் பக்கத்தில் திருமணநாளையொட்டி புகைப்படத்துடன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

எக்ஸ்ரா ஓட்டுகள்:

அதில் அவர், ‘நிலன் உன்னையும், உன் அம்மாவையும் நான் மிகவும் நேசிக்கிறேன். விஜியை மிகவும் மிஸ் செய்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் நிலன் மிகவும் அழகாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கூடவே நிலன் முகத்தைப் பார்த்தே விஜிக்கு தாங்கள் பலர் வாக்களித்ததாகவும் கூறியுள்ளனர்.

3ம் இடம்:

3ம் இடம்:

பிக் பாஸ் வெளியிட்ட கடைசி வாக்குகள் நிலவரப்படி விஜி மூன்றாம் இடத்தில் இருந்தார். ஆரம்பத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த ஜனனியை பின்னுக்குத் தள்ளி அவர் அந்த இடத்திற்கு வந்தார். இப்போது தான் தெரிகிறது விஜிக்கு அதிரடியாக எப்படி இத்தனை ஓட்டுகள் கிடைத்தது என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X