பப்லுவுக்கு ஏன் அப்படி நடக்குது தெரியல?.. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே டோர் சாத்திட்டு.. நிமிஷிகா பகீர்!
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான சீரியலான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை நிமிஷிகா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சீரியல் இயக்குநர்களுக்கு கூடத் தெரியாமல் உதவி இயக்குநர்கள் இளம் பெண்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே டோர் சாத்திக் கொண்டு தப்பான வேலைகளை செய்வதாக கண்கூடாக பார்த்துள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார் நிமிஷிகா.

மேலும், நடிகர் பப்லு பிருத்விராஜ் குறித்தும் அவருக்கு சரியான காதல் ஏன் செட்டாகவில்லை என்பது குறித்தும் பல்வேறு விஷயங்களை சின்னத்திரை நடிகை நிமிஷிகா வெளிப்படையாக அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
சீரியல் நடிகை நிமிஷிகா: அழகு பதுமையாக சின்னத்திரை தொடர்களில் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வருகிறார் நடிகை நிமிஷிகா ராதாகிருஷ்ணன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டாகவும், படு கிளாமராகவும், பக்தி மோடிலும் இவர் ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சீரியலிலும் அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் மட்டுமில்லைங்க சின்னத்திரையிலும் அந்த கன்றாவி நிறையவே நடக்கிறது. என் கண்முன்னாடியே பல விஷயங்களை பார்த்து அதிலிருந்து ஓடி ஒளிந்துக் கொண்டு தான் நடித்திருக்கிறேன். சில பெண்களே சகஜமாக சிரித்துக் கொண்டு ரூமுக்கு செல்வதை எல்லாம் பார்த்திருக்கிறேன். சிலர் நோ மீன்ஸ் நோ என சொல்வதையும் பிரச்சனைகள் வெடிப்பதையும் பார்த்துள்ளேன். அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போகும் பெண்களுக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக ஏதாவது நடக்கும் என நினைத்துக் கொள்வேன் என வெளிப்படையாக பேசியுள்ளார் சீரியல் நடிகை நிமிஷிகா. கடைக்குட்டி சிங்கம் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலராகி உள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்லயே: சின்னத்திரை இயக்குநர்களுக்கு கூட தெரியாத அளவுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை ஷூட்டிங் ஸ்பாட்லயே ரூமுக்குள் அழைத்துக் கொண்டு அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் கதவை சாத்துவாங்க.. டேய் என்னடா பண்றேன்னு கேட்டால், அதெல்லாம் ஒண்ணுமில்லை அக்கா என மழுப்பிவிட்டு அத்தனை தப்பையும் பண்றாங்க என புலம்பியுள்ளார்.

பப்லு பிருத்விராஜ் பற்றி: பப்லு பிருத்விராஜ் உடன் சீரியலில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அவர் குறித்து உங்கள் கருத்து என்ன என்கிற கேள்விக்கு அவர் ரொம்பவே நல்ல மனுஷன். ஆனால், என்னவென்று தெரியவில்லை. அவருக்கு சரியான காதல் அமையவில்லை என நினைக்கிறேன். அதனால் தான் அடுத்தடுத்து ஜம்ப் பண்ணிட்டே போறாரு என்றும் நிமிஷிகா கூறியுள்ளார்.
கடுமையான தண்டனை தேவை: எந்த இடத்தில் இருந்தாலும் இப்படி அட்ஜெஸ்ட் செய்து விட்டு வாய்ப்புகளை பெறுவது என்பது தவறான விஷயம் தான். பெண்களை ஆண்கள் கார்னர் செய்து இப்படி பண்ண சொல்லக் கூடாது. அதே போல, பெண்களும் அப்படி கேட்கும் ஆண்களை உடனடியாக புகார் அளித்து மாட்டி விட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டால் தான் கலைத்துறை களங்கமில்லா துறையாக பலருக்கும் வாழ்வளிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வரும் என நிமிஷிகா செம போல்டாக பேசியுள்ளார். தொடர்ந்து அனைத்து துறைகளிலும் இருந்து பெண்கள் வெளிப்படையாக இப்படியொரு மோசமான விஷயத்தை சிலர் செய்வதால் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரிக்கும் கெட்டப் பெயர் நடக்கிறது என்றும் அதை முன்னணி பிரபலங்கள் சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











