»   »  குஷ்புவும், வெங்கட்பிரபுவும்… "வேந்தரின்" நினைத்தாலே இனிக்கும்!

குஷ்புவும், வெங்கட்பிரபுவும்… "வேந்தரின்" நினைத்தாலே இனிக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெங்கட் பிரபு, பிரேம்ஜி இணைந்தாலே கலாட்டதான். இவர்கள் இருவரும் குஷ்பு உடன் இணைந்து தங்களின் கலாட்டா நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "நினைத்தாலே இனிக்கும்" நிகழ்ச்சியில் இந்தவாரம் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் பங்கேற்கின்றனர்.

கேம் ஷோக்களை நடத்திவந்த குஷ்பு வண்ணமயமான, பிரமாண்ட அரங்கில் நடத்தும் இந்த டாக் ஷோவில் இதுவரை நடிகர்கள் விவேக், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, ஜெயம் ரவி, சரத் குமார் இயக்குனர் பாக்யராஜ், சுந்தர்சி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சுவாரஸ்ய உரையாடல்

சுவாரஸ்ய உரையாடல்

கோவை சரளா, பிரியா ஆனந்த், பூர்ணிமா பாக்யராஜ், நதியா ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்விலும், திரையுலகிலும் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கலாட்டா பகுதிகள்

கலாட்டா பகுதிகள்

மேலும் கலந்து கொள்ளும் திரை நட்சத்திரங்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் 10டணக்கா10, கலாட்டா கெட்-அப், வேந்தர் ஷாப்பிங் போன்ற சுவாரஸ்யமான பகுதிகள் இடம்பெறுகின்றன.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் ஆச்சரியம் அடையும் பிரபலங்களின் உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ கொண்டு வந்து நிறுத்துவது ,உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியாய் அமைந்துள்ளது.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

பிரபல முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொள்ளும் நிகழ்ச்சி வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இதில் அவரது சகோதரர் பிரேம்ஜியும் பங்கேற்று வெங்கட் பிரபு பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

வேந்தர் டிவியில்

வேந்தர் டிவியில்

நடிகை குஷ்புவின் இனிமையான, கலகலப்பான இந்த டாக் ஷோ வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 11.00 மணிக்கும், மறுஒளிபரப்பு வெள்ளி இரவு 8.00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது .

English summary
The ever gorgeous, beautiful Kushboo hosts the celebrity talk show “Ninaithale Inikkum” on Vendhar TV Set in a colourful set, Kushbu takes the celebrities on a nostalgic trip down memory lane talking about their fond memories on and off the screen.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil