Naam iruvar namaku iruvar serial: சாட்டிங் டேட்டிங்ன்னு போறாங்க... இதுக்கே மயக்கம் போட்டா எப்டி?

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் டாக்டர் அரவிந்த் மனைவி தாமரை கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும், முதலிரவுன்னு சொன்ன உடனே மயக்கம் போட்டு விழுந்துடறா.

செந்தில் மாயனாகவும், டாக்டர் அரவிந்தாகவும் இரட்டை வேஷத்தில் இரட்டைப் பிள்ளையாக நடிக்கிறார். ஒரு பிள்ளையான டாக்டர் அரவிந்த் பெற்றவரின் நணபரிடமும் , மாயன் பெற்றவரிடமும் வளர்க்கிறார்கள்.

இப்போது மாயன் தேவியை கல்யாணம் செய்துகிட்டு வீட்டோடு மாப்பிள்ளையா இருக்கான். இருவருக்குமே கல்யாணம் ஒரே நாளில் நடந்ததால், இருவருக்கும் கல்யாண நாள் கொண்டாட மாயனின் அப்பாவும், அரவிந்த் அப்பாவும் முடிவு செய்யறாங்க.

அரவிந்த் தாமரை

அரவிந்த் தாமரை

அரவிந்தும் கல்யாணம் செய்ய இருந்த பெண்தான் தேவி.ஆனால், மாயன் அவளைத் தூக்கிட்டு போயி கல்யாணம் செய்துக்க, இங்கே அரவிந்துக்கு கத்தி முனையில் தாமரையுடன் கல்யாணம் நடக்குது இரு ஜோடிகளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆன போதிலும், சாந்தி முகூர்த்தம் நடக்கலைன்னு பெத்தவங்களுக்கும், வளர்த்தவங்களுக்கும் தெரிஞ்சுருது. காரணம் ரெண்டு பேருமே விவாகரத்துக்கு கேஸ் போட்டு இருக்காங்க.

அரவிந்த் தாமரை

அரவிந்த் தாமரை

ஒரு வழியா தேவிகிட்ட போன் செய்து,கல்யாண நாள் கொண்டாட வாங்கன்னு மட்டும் சொல்லிட்டாங்க. அன்னிக்குத்தான் உங்களுக்கு சாந்தி முகூர்த்தம்னு சொல்லலை. இது தெரியாம தேவிகிட்ட மாயன் வர மாட்டேன்னு அடம் பிடிக்க, தேவி மாமாவுக்கு போன் செய்து, மாயன் வரமாட்டேன்னு சொல்றான்னு சொல்றா. அவன் தாம்மா இந்த விஷசத்துக்கு என்னை கூப்பிடுங்கன்னு சொன்னான்னு சொல்லி பொய் சொல்றார். தேவியும் கத்தியை வச்சு மிரட்டி மாயனை சம்மதிக்க வச்சுட்டா.

மயக்கம் தாமரை

மயக்கம் தாமரை

அரவிந்த் கிட்ட அப்பாவே வெட்கத்துடன் சொல்லிடறார்.உங்க கல்யாண நாள் கொண்டாட ற அன்னிக்கே உங்களுக்கு சாந்தி முகூர்த்தம்வச்சு இருக்கோம் னு சொல்றார். இதை தாமரைகிட்ட சொல்லிடுங்கன்னு மகள், பொண்டாட்டிகிட்ட சொல்றார். சரி,சொல்லலாம்னு ரெண்டு பேரும் தாமரை கிட்ட போறாங்க. சொல்வதற்க்கு கூச்சப்பட்டு தயங்கி நின்னுடட்டு பேச ஆரம்பிக்கறாங்க.

விஷயம் தெரியுமா

விஷயம் தெரியுமா

தாமரை உனக்கு விஷயம் தெரியுமா.. .உங்க கல்யாண நாளை கொண்டாடிட்டு, நிஜமான கல்யாணம் நடக்கும் போது என்னென்ன சம்பிரதாயம் செய்யறாங்களோ அதை செய்யலாம்னு இருக்கோம்னு மாமியார் சொல்றாங்க. சரிங்க அத்தைன்னு தாமரை சொல்ல, உனக்கு புரியுதா எதுக்கு இதை சொல்றேன்னு கேட்கறாங்க. புரியுது அத்தைன்னு சொல்றா.

என்னதான் சொல்லு

என்னதான் சொல்லு

என்ன புரிஞ்சுது சொல்லு பார்க்கலாம்னு நாத்தனார் கேட்க, அது எங்க கல்யாண நாள் கொண்டாட போறோம். அதுதானே அத்தைன்னு கேட்கறா. அடக் கடவுளே..குழந்தை எப்படி பொறக்கும்னு கேட்க, இது என்ன கேள்வி அத்தை..பத்து மாசம் சுமந்து பெத்தால்தான் குழந்தைன்னு சொல்ல. என்னாடி இப்படி இருக்கான்னு.சாந்தி முகூர்த்தம்னா என்னைன்னு தெரியுமான்னு அத்தை கேட்கறாங்க.

பிழைப்பா இருக்கே

பிழைப்பா இருக்கே

உடனே மயக்கம் போட்டு தாமரை விழுந்துட, அடிப்பாவி என்னடி இவ உயிரை வாங்கறா. .வெட்கம் கெட்ட பொழப்பாயிருக்குன்னு தண்ணி தெளிச்சு எழுப்பிவிட்டு, இதோபாரு... அன்னிக்குத்தான் உங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தம். மறுபடி மயங்கி விழுந்தே கொன்னருவேன்னு மிரட்டிட்டு போறாங்க. அதது சாட்டிங், டேட்டிங்ன்னு போகுது.. இது என்னமோ மயங்கி மயங்கி விழுது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X