மாமியார்- மருமகன் பிரச்சனைக்கு நிர்மலா பெரியசாமி செய்த 'பஞ்சாயத்து'!
வசந்த் தொலைக்காட்சியில் 'வாய்மையே வெல்லும்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல செய்தி வாசிப்பாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்குகிறார்.
இச்சம்பவங்கள் அனைத்தும் உண்மைக் கதைகள். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் நேரடியாக இதில் பங்கு பெறுகின்றனர்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு, நிகழ்ச்சியிலேயே தீர்வும் வழங்கப்படுகிறது. பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. சமாதான சூழ்நிலை உண்டாக்கப்படுகின்றது.

குடும்ப பஞ்சாயத்து…
ஜீ தமிழ் டிவியில் ‘சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி மூலம் குடும்ப பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காட்டிய நிர்மலா பெரியசாமி இப்போது வசந்த் டிவிக்கு ‘வாய்மையே வெல்லும்' மூலம் இடம் பெயர்ந்துள்ளார்.

மாமியார் – மருமகன்
நேற்றைய பஞ்சாயத்து மாமியார் - மருமகனுக்கும் இடையேயானது. திருமணம் செய்த பெண்ணை கணவன் வீட்டு அனுப்ப மறுக்கிறார் ஒரு மாமியார். வீட்டோடு மாப்பிள்ளையாக இரு என்று கூறவே விசயம் பஞ்சாயத்திற்கு வந்துவிட்டது.

நகை முக்கியமா?
திருமணத்திற்கு போட்ட நகையை கணவர் அடகு வைத்து விட்டதால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த பெண்ணைப் பார்த்து நிர்மலா பெரியசாமி கேட்கிறார். நகை முக்கியமா? கணவர் முக்கியமா?. ஒரு திருமணத்திற்கு கணவருடன் போவது நன்றாக இருக்குமா? கணவர் இல்லாமல் வெறும் நகையை மட்டும் போட்டுக் கொண்டு போவது நன்றாக இருக்குமா என்று கேட்கவே அந்தப் பெண், எனக்கு கணவர்தான் முக்கியம் என்று கூறினார்.

தீர்ப்பு சொல்லும் நேரம்
உடனே நிர்மலா பெரியசாமி இரு வீட்டு பெரியவர்களையும் அழைத்து கணவன் - மனைவியை சேர்த்து வைத்து தீர்ப்பு சொல்லி அனுப்புகிறார். வீட்டோடு மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று அடம்பிடித்த மாமியாருக்கும் அட்வைஸ் செய்து (!) அனுப்பிவைத்தார்.

ஆகஸ்ட் 19 முதல்
இந்த நிகழ்ச்சி, வசந்த் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 19ஆம் தேதியிலிருந்து திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 8.30 மணிலியிருந்து 9.30 மணி வரை 1 மணி நேரத்திற்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நிகழ்ச்சி அமைதியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனிதான் அடிதடி காட்சிகள் அரங்கேறும்.


Click it and Unblock the Notifications











