நித்யா-பாலாஜி சண்டையையே காண்பிப்பது ஏன்?: கமல் ஹாஸன் விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யா-பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிப்பது ஏன் என்று கமல் ஹாஸன் விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் அடிக்கடி மோதுகிறார். நித்யாவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் பாலாஜி இல்லை பாலாஜி வீட்டில் பிக் பாஸ் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு கணவன், மனைவி சண்டையை தான் காண்பிக்கிறார்கள்.

கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் பாலாஜி, நித்யா இடையேயான சண்டையை அதிகம் காட்டுவது குறித்து கமல் ஹாஸனிடம் கேள்வி எழுப்பினார்.

பாலாஜி
நித்யா, பாலாஜி சண்டையை வேண்டும் என்றே தொடர்ந்து காட்டவில்லை. அவர்கள் இருவரும் யாரையும் பேச விடாமல் தொடர்ந்து சண்டை போடுகிறார்கள். அவர்களை பிறர் சமாதானம் செய்யவும்விட மாட்டேன் என்கிறார்கள் என கமல் தெரிவித்தார்.

போர்
நித்யா, பாலாஜி சண்டையை பார்த்து பார்த்து பார்வையாளர்கள் கடுப்பாகிவிட்டனர். அவர்கள் இருவரை காண்பித்தாலே போர் அடிக்கிறது என்கிறார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல கமலுக்கும் போர் அடிக்கிறதாம்.

போர்
நித்யாவும், பாலாஜியும் சண்டையை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். அவர்களுக்கு போர் அடிக்கவில்லை. ஆனால் எனக்கு போர் அடித்துவிட்டது என்கிறார் கமல்.

கெட்ட வார்த்தை
பாலாஜி நித்யாவை கெட்ட வார்த்தையால் திட்டுவது தவறு என்று ஜனனி தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் சார் நிச்சயம் உங்களிடம் கேட்பார் என்றும் ஜனனி தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











