குழாயடி சண்டை போட்ட மும்தாஜ் நித்யா! ஐஸ்வர்யாவை கண்டுக்காத பாலாஜியின் தாய்!
பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில் மும்தாஜும் நித்யாவும் சண்டையிட்டுக்கொண்டனர்
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யாவை பாலாஜியின் அம்மா மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில் வீட்டிற்குள் இருக்கும் மூன்று இறுதிப்போட்டியாளர்களிடமும் மற்ற போட்டியாளர்களின் உறவினர்கள் கேள்வி கேட்டனர்.

அப்போது, ரித்விகாவிடம் நீங்கள் ஏன் ஜனனியை எப்போதுமே டைட்டிலை வெல்வதற்கு தகுதியானவராக முன்மொழியவில்லை எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரித்விகா, ஒரு படி மேல் மற்றவர்கள் தகுதியுடையவராக இருப்பதனால் அவரை முன்மொழியவில்லை. ஆனால் அவரும் தகுதியான போட்டியாளர்தான் எனக் கூறினார்.
பாலாஜியின் தாயார் ஐஸ்வர்யாவிடம் பேச ஆரம்பிக்கும்போதே ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்டார். நான் அதைப்பற்றி பேசவரவே இல்லை, எங்களை பொருத்தவரை தவறை உணர்ந்தாலே போதும் என நினைப்பவர்கள் எனக் கூறினார்.
மும்தாஜுக்கும் நித்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து மும்தாஜின் அண்ணன் கேட்டதும் குழாயடி சண்டையளவுக்குப் போனது.
நித்யா வெளியேறியதற்குப் பிறகு மும்தாஜின் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் கேவலாமாக திட்டியதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மும்தாஜ், நீங்கள் சொந்த விஷயங்களை பொதுவெளிக்குக் கொண்டுவந்ததே அதற்கு காரணம் என்றார்.
பிறகு பேசிய நித்யா வீட்டிற்குள் இருந்தபோது ஒரு நாளைக்கு நான்கு அல்லத் ஐந்துமுறை தனக்கும் பாலாஜிக்கும் இடையேயுள்ள பிரச்சனை குறித்து கேட்பார். ஆனால் அவர் வெளியேறியப் பிறகு அதைப்பற்றி கேட்கவில்லை. வீட்டிற்குள் கேட்டது கேமராவுக்காகவா அல்லது உண்மையான அக்கரையா எனத் தெரியவேண்டும் என்றார்.
அவரை விசாரிக்கக் கூடாது என நான் தான் தடுத்தேன், வீட்டிற்குள் நித்யா செய்தது சரியல்ல என மும்தாஜ் அண்ணன் சொல்ல, பிரச்சனை பெரிதானது. பிறகு மும்தாஜ் பாலாஜி நித்யா நன்றாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசை எனச் சொல்ல, அதன்பிறகு பாலஜி ஒரு விளக்க உரை கொடுத்து ஒருவழியாக பிரச்சனையை முடித்தனர்.
எல்லாவற்றையும் வேடிக்கைபார்த்த கமல், பிரச்சனை முடிக்காமல் கொஞ்சம் குழாயடி சண்டை போட்டுவிட்டீர்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











